அறன் வலியுறுத்தல்

இலக்கியம்

முன்னுரை

அறத்தின் வலிமையை கூறுவது அறன் வலியுறுத்தல்.

அறம்

பொருள்

இன்பம்

வீடு

இதில் அறத்திற்கு ஏன் முதலிடம் என்றால், பொருள், இன்பம், வீடு ஆகிய மூன்றையும் தரவல்லது அறம். எனவே அதற்கு முதலிடம்.

பொருள் இருபயன்களைத் தரும். இம்மை வாழ்விலே செல்வத்தைக் கொண்டு தானம், தருமம் செய்வதனால் மறுமைப் பயனும் கிடைக்கும்.

காமம் – விருப்பம். இது இம்மைப்பயனை மட்டுமே தரும்.

தமிழர்கள் வரிசையை விரும்புகிறபடியால் வரிசைப்படிக் கூறுகிறார்.

அதிகாரம் – 4 – குறள் – 31

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்

காக்க மெவனோ உயிர்க்கு.

விளக்கம்;-

எவனோ – எது, என்ன என்று அர்த்தம்.

எல்லாப்பயன்களிலும் பெரிய பயன் வீடுபேறு என்பதால் சிறப்பு என்கிறார். வீடுபேறு என்பது மற்றவற்றை விட சிறந்தது.

சிறப்பு ஈனும் – வீடு பேற்றையும் தரும்.

செல்வமும் ஈனும் – துறக்கம் (சொர்க்கம்) முதலிய செல்வத்தைத் தரும்.

ஆக்கம் – மேன்மேலுயர்தல்.

அறமே உயர்ந்தது. அறமே ஆக்கம். அறத்தினைச் செய்வதால் வரும் நன்மை கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *