ஆகு பெயர் என்றால் என்ன?

இலக்கணம்

ஒன்றினுடைய பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர். ஆனால் தொடர்பு இருந்தால் தான் ஒன்றினுடைய பெயரை இன்னொன்றுக்குச் சொல்ல முடியும். தொடர்பு இல்லாததை சொல்ல முடியாது.

உதாரணம்;-

வானம் – மேகத்தின் இருப்பிடம்.

மேகம் – மழையின் இருப்பிடம்.

ஆகவே மழையை மேகம் என்றும் சொல்லலாம். மேகத்தை வான் என்றும் சொல்லலாம். மழையையும் வான் என்று சொல்லலாம்.

1 thought on “ஆகு பெயர் என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *