மகா பரிசுத்த ஸ்தலம் ;-
உடன்படிக்கைப் பெட்டி என்கின்ற கிருபாசனப் பெட்டி இங்கே இருக்கும். இத்தலம் நான்கு பக்கமும் மேலேயும் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே வெளிச்சம் இல்லையென்றாலும் தேவ மகிமை உண்டு. இதையே சாலொமோன் 1 இராஜக்கள் 8.12 ல் காரிருளிலே வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்கிறார்.
பரிசுத்த ஸ்தலம்;-
இதில் பொன்னால் செய்யப்பட்ட தூபபீடம் இருக்கிறது. இதுவே ஆராதனையையும் வேண்டுதலையும் குறிக்கிறது. மேலும் சமூகத்தப்பங்களை வைக்கிற மேசை இருக்கிறது. இது பனிரெண்டு அப்போஸ்தலரின் உபதேசத்தையும் அறுபத்தாறு ஆகமங்களையும் குறிக்கிறது. இந்த அப்பங்கள் எடுக்கப்படுகிற நாளிலே சூடாக தினமும் வைக்கப்பட வேண்டும். நாமும் தினமும் சூடாக வேதம் வாசிக்க வேண்டும். உபதேசங்களைக் கேட்க வேண்டும்.
குத்து விளக்கு;-
பின்பாக பொன்னால் செய்யப்பட்ட குத்து விளக்கு இருக்கிறது. இது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. வரங்களைக் குறிக்கிறது. இந்தக் குத்து விளக்கின் மூலமாகவே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிச்சம் வருகிறது.
பலிபீடம்;-
பலிபீடம் வெண்கலத்தால் உண்டானது. இரத்தமும் கறையுமாய் இருக்கும். இதைக் கண்டு மனந்திரும்பிய பின்னரே மகிமையைக் காண முடியும். இயேசுவின் இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டதையும் மீட்கப்பட்டதையும் பலிபீடம் குறிக்கிறது. இரட்சிக்கபட்டவர்கள் கால்களை கழுவி உள்ளே வர வேண்டும்.
அதாவது ஆசரிப்புக்கூடாரத்திற்கு ஒரே வாசல் மட்டுமே உண்டு. அந்த வாசல் வழியாக மட்டுமே மனந்திரும்பினவராக உள்ளே வந்து மகிமையைக் காண முடியும்.
வெண்கலத்தொட்டி;-
பெண்கள் முகம் பார்க்கப் பயன் படுத்திய வெண்கலத்தை இதற்கு கொடுத்தனர். ஆம் ஆடம்பரம் வேண்டாம் என்று ஆண்டவருடைய வேலைக்குக் கொடுத்தனர்.