தலைப்பாகை;-
பசும் பொன்னினாலே ஒரு பட்டத்தைப்பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி (யாத்திராகமம் 28.36)
இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால், நம்முடைய பரிசுத்தத்தை மற்றவர்கள் கண்டு வாசித்துப்படிக்கும் படியாக இருக்க வேண்டும். ஆகவே இதை மட்டும் எழுத்துக்களால் எழுதச்சொன்னார் தேவன்.
மார்ப்பதக்கம்;-
இதிலே பதிக்கப்பட்டிருக்கும் பனிரெண்டு கற்கள் இஸ்ரேலரையும், இரண்டு கோமேதகக் கற்களான ஊரிம், தும்மீம் என்னும் கற்கள் தேவ சித்தத்தை பரிபூரணமாக வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது. இதன்படி ஆசாரியன் தன் ஜனத்தின் காரியங்களை தனது மார்பிலே ஏந்திச் சுமக்க வேண்டும். தேவ சித்தம் இதுதான் என்று திட்டமாய் அறிவிக்க வேண்டும்.
ஏபோத்;-
தேவ சித்தத்தைப் பரிபூரணமாக வெளிப்படுத்தும் ஊரிம், தும்மீம். இதுவே ஏபோத். யாத்திராகமம் 28;24,25 ன்படி இந்த ஏபோத் மார்ப்பதக்கத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
அங்கி;-
இவைகளின் ஓரங்களிலே சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம் பழமும் ஒரு பொன்மணியும் மாதளம் பழமுமாய்த் தொங்குவதாக. யாத்திராகமம் 28;34. இதன்படி மாதளம் பழம் ஆவியின் கனிகளையும், பொன்மணி ஆவியின் வரங்களையும் குறிக்கிறது. எப்படியென்றால், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே பிரதான ஆசாரியன் சென்றிருக்கும் போது இந்த
மணிகளும், கனிகளும் தான் சத்தம் கொடுத்துக்கொண்டேயிருக்கும். (பிரதான ஆசாரியன் சாகவில்லை உயிரோடிருக்கிறான் என்று) அது போலவே தான் வரங்களும் கனிகளும் நம்மிலே கிரியை செய்யும்போது நாமும் ஜீவனோடு இருக்கிறோம்.
நம்முடைய அனுதின கிறிஸ்தவ வாழ்க்கையும் இப்படி இருக்க வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கின்றார்.