இலக்கியம்

  • அதிகாரம் – 14 – குறள் – 140

    உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார். விளக்கம்:- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் – உலகத்தோடு பொருந்த ஒழுகதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் – பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். உலகம் – உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. இதுவே தமிழர் பண்பாடு. உயர்ந்தவரோடு ஒத்து நட என்பதே இதன் பொருளாகும். ஒழுக்குவது – மேலேயிருந்து ஒழுகுவது. உயர்ந்தோரிடம் இருந்து வருவதற்குப் பெயரே ஒழுக்கம். ஆகவே உலகத்தோடொட்ட ஒழுகுவது என்றால் உயர்ந்தவர்களோடு ஒட்டுவதாகும்.…


  • அதிகாரம் – 14 – குறள் – 139

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். விளக்கம்:- வழுக்கியும் தீய வாயால் சொலல் – மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா – ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. ஒழுக்கமுடையவர்கள் (வழுக்கி) தவறியும் கூடத் தீய சொற்களைச் சொல்லமாட்டார்கள். பேசுவதற்கு இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்கள் எதற்கு? இதை இனியவை கூறல் அதிகாரத்தில் தெளிவாக நாம் படித்துள்ளோம். இதையே வீட்டிலும் கடைபிடிக்க வேண்டும். தீய சொற்களைப் பேசுபவர்கள்…


  • அதிகாரம் – 14 – குறள் – 138

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். விளக்கம்:- நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும்.…