நான் பிரிசில்லா. மாறி வரும் உலகச்சூழலில் நமது மொழி, பாரம்பரியம், மருத்துவம், வாழ்வியல் சிந்தனைகள் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையை மாற்றி நமது மண் சார்ந்த மரபு மருத்துவம், சமையல் பற்றி நமது முன்னோர்களிடம் நான் கற்றுக்கொண்டதையும், நமது அனுதின வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைகளையும் உள்ளடக்கிய நமது தமிழ் இலக்கியத்திலிருந்து நான் கற்றுக் கொண்டதையும் எழுதிக் கொண்டும் தேடிக் கொண்டும் இருப்பவள்.