ஏகாரம் இருவகைப்படும்.
- பிரிநிலை ஏகாரம்.
- தேற்ற ஏகாரம்
இரு காரணங்களுக்காக இந்த ஏகாரத்தைப் போடலாம்.
- ஒன்றிலே இருந்து ஒன்றைப் பிரிப்பதற்காகப் போடலாம். இதற்குப் பிரிநிலை ஏகாரம் என்று பெயர்.
உதாரணம்’-
இவருள் அவரே நல்லவர்.
இவற்றுள் அதுவே சிறந்தது.
2. உறுதிப்படுத்துவதற்கு ஒரு ஏகாரம் உண்டு. அதுவே தேற்ற ஏகாரம் எனப்படும்.
உதாரணம்;-
இறைவன் பெரியவன்.
இறைவனே பெரியவன்.
உலகம் பெரியது.
உலகமே பெரியது.
திருவள்ளுவர் புலவர்.
திருவள்ளுவரே புலவர்.
ஆதிபகவன் முதற்றே உலகு என்ற வரிகளின் அர்த்தமாவது, இந்த உலகம் தோன்றுவதற்கு ஆண்டவன் மட்டுமே காரணம் என்று கூறுவது அல்லது உறுதிப்படுத்துவது தேற்ற ஏகாரம் எனப்படும்.
It was a good article, keep writing.