பலவற்றுக்கான குணத்தை ஒன்றிலே வைத்துக் கூறுவது. பலவற்றுக்குப் பொருந்துவதை ஒருமையிலே கூறுவது சாதி ஒருமை எனப்படும்.
உதாரணம்;-
கோழி முட்டையிடும். இங்கே எல்லாக் கோழி இனங்களும் முட்டையிடும்.
குயில் கூவும். ஒரு குயில் மட்டுமல்ல எல்லாக் குயில்களும் கூவும்.
பப்பாளிப்பழம் இனிக்கும். எல்லாப் பப்பாளிப் பழங்களும் இனிக்கும்.
மாடு பால் தரும். ஒரு மாடு மட்டுமல்ல எல்லா மாடுகளும் பால் கொடுக்கும்.