சாப்பிடும் சுவை ஆறு
சாப்பிடும் முறை நான்கு
ஆறு சுவைகள்;-
- இனிப்பு
- புளிப்பு
- உவர்ப்பு
- கார்ப்பு
- கசப்பு
- துவர்ப்பு
ஆறு சுவைகள் மட்டுமே உண்டு. ஏழாம் சுவை கிடையாது. மேலும் சொல்லும் போதும் உப்பு உப்பு என்று அனைத்துச் சுவைகளும் முடிகிறது. அப்படியே ஆறு சுவைகளிலும் உப்பு கலந்துள்ளது. உப்புச் சேர்த்தால் மட்டுமே அனைத்து சுவை உணவுகளும் ருசியைக் கொடுக்கிறது.
சாப்பிடும் முறை நான்கு ;-
உண்ணல்;-
உணவை வாய்க்குள் வைத்து மென்மையாக மென்று சாப்பிடுவதற்கு உண்ணல் என்று பெயர்.
சோறு உண்டேன் என்றே கூற வேண்டும்
தின்னல்;-
கடித்துச் சாப்பிடுவதற்குத் தின்னல் என்று பெயர்.
முறுக்குத் தின்றேன் என்று கூற வேண்டும்.
நக்கல்;-
தேன், பாயாசம் போன்ற உணவுகளை நக்கிச் சாப்பிடவேண்டும். ஏனென்றால், இனிப்புச் சுவையை உணரும் சுவை அரும்புகள் நுனி நாக்கிலேதான் இருக்கின்றன.
பருகுதல்;-
பால், பழச்சாறுகள், தேநீர் போன்றவற்றைப் பருக வேண்டும்.
பெரிய புராணத்தில் கூறப்படுகின்ற இளையான்குடி நாயனார் இந்த உணவு முறை அடிப்படையில்தான் சைவ அடியார்களுக்கு விருந்து அளிப்பாராம். ஆறு சுவைகளிலும் நான்கு விதமான உணவு சமைத்து விருந்தோம்புவாராம்.
மொத்தம் இருபத்திநான்கு விதமான உணவுகள் சமைத்திருக்கிறார் இளையான்குடி நாயனார்.
It was a good article, keep writing.