தேவன் ஆள்தத்துவமுள்ள திரித்துவ தேவன். திரி – மூன்று.
- பிதா
- குமாரன்
- பரிசுத்த ஆவி
இந்த மூன்று ஆள்தத்துவமும் சேர்ந்ததே எல்லாம் வல்ல இறைவன். ஆதியாகமத்திலிருந்து இதற்கு நிறைய வசன ஆதாரங்கள் உண்டு.
இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்க நம்மில் ஒருவரைப் போல் ஆனான். ஆதியாகமம் 3.22
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். ஆதியாகமம். 11.7
மேற்கண்ட இருவசனங்களிலும் பன்மை இருக்கிறது. பன்மை என்றால் இரண்டுக்கும் மேற்பட்டவர் என்று பொருள்.
தேவனின் படைப்பில் திரித்துவம்
பின்பு தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக ஆதியாகமம் 1.26
எனவே 1 தெசலோனிக்கேயர் 5. 23 ன் படி மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்றாயிருக்கிறான்.
மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. நீதிமொழிகள் 20.27
மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும். நீதிமொழிகள் 18.14
ஆவி என்பது இருதயம் 1 பேதுரு 3.4
சாகத்தக்கதாய் அவன் சிம்சோன் ஆத்துமா விசனப்பட்டு……. நியாதிபதிகள் 16.16
அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும். நீதிமொழிகள் 2.10
ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல நீதிமொழிகள் 19.2
இந்த வசனங்களின் படி ஆத்துமா என்பது மனது, அறிவு, எண்ணம்.
எபிரேயர் 4.12ன்படி ஆவியையும் ஆத்துமாவையும் பிரிக்கவே முடியாது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2.7
இந்த வசனத்தின்படி புறம்பான மனுஷனாகிய சரீரமும் உள்ளான மனுஷனாகிய ஆவியும் ஆத்துமாவும் இணைந்து செயல்படுவதற்காகத்தான் தேவன் ஜீவசுவாசத்தை ஊதினார்.
இப்படி தேவனும் மூன்றாக இருக்கிறார்.
மனிதனும் மூன்றாக இருக்கிறான்.
தள்ளப்பட்ட தேவதூதன் லூசிபராகிய சாத்தானும் இந்த திரித்துவத்தை எடுத்துக்கொண்டான்.
- வலுசர்ப்பம்
- அந்திக்கிறிஸ்து
- கள்ளத்தீர்க்கதரிசி
இனி ரோமர் 1.20 ன் படி காணப்படாத திரித்துவம் காணப்படுகிற படைப்புகளிலே எப்படி இருக்கிறது என்று சிந்திக்கலாம்.
மலர்கள்
- வண்ணம்
- வடிவம்
- நறுமணம்
எந்த மலராக இருந்தாலும் இந்த மூன்று தன்மையும் இருக்கும். உற்றுநோக்கினால் தெரியும்.
அண்டசராசரங்கள்
- இடம்
- பொருள்
- காலம்
இந்த மூன்றும் இணைந்தது தான் உலகம் என்று விஞ்ஞானம் ஒத்துக்கொள்கிறது.