கருப்பொருளாகிய பாயிரம் கேட்போருக்கு நுண்பொருளாகிய நூல் இனிது விளங்கும்.
துறவி – நீத்தார் – முற்றும் துறந்த முனிவர்
அறம் பொருள் இன்பம் முதலாகிய பொருளை உள்ளவாறு உணர்த்துவர்.
இயற்கையிலே பொதிந்த இரகசியத்தை உடைய கடவுளைப்பற்றி முதலாவது அதிகாரத்திலே கூறினார்.
இயற்கையிலே பொதிந்த அறத்தைப் பாதுகாத்துக் கொள்ள மழை அவசியம் என்பதை வான்சிறப்பு என்ற அதிகாரத்திலே கூறிவிட்டார்.
இயற்கையிலே பொதிந்த இரகசியங்களை உலகத்தார்க்கு எடுத்துக்காட்டிய துறவிகளின் பெருமை பற்றி இந்த அதிகாரத்திலே கூறப்போகிறார்.
அதிகாரம் – 3 – குறள் – 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் துணிவு.
விளக்கம்;-
இறைவனிடம் போய்ச்சேர வேண்டுமென்றால் தர்மத்தைக் கடைபிடிப்பது. தான் முதல்படி. தர்மத்தின் மேலே தான் இறைவன் ஏறி வருவார். எனவே இந்த தர்மமே நம்மை மேலே மேலே தள்ளி இறைவனிடம் சென்று சேர்த்துவிடும்.
பிரம்மச்சாரி என்றால் பிரம்மச்சாரிக்கு உரிய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். வணிகன் என்றால் வணிகனுக்கு உரிய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இப்படி அவரவர் நிலைக்கு உரிய ஒழுக்கங்களை வழுவாது கடைபிடிக்கும் போது அறம் வளரும். அறம் வளர வளர பாவம் தேயும். பாவம் தேய்ந்தவுடன் அறியாமை இருள் நீங்கும்.
அறியாமை நீங்குவதால் ஏற்படும் பயன்கள்;-
- அறியாமை நீங்கியவுடன் எது நித்தியம் எது அநித்தியம் என்ற தெளிவு வந்து விடும்.
- இம்மையிலும் ஒன்றுமில்லை. மறுமையிலும் ஒன்றுமில்லை என்று புரியும்.
- வீடு – இறைவனுடைய (தாள்) அடிகளோடு பொருந்துவது. இந்த வீட்டின் மீது விருப்பம் உண்டாகும். உலகியல்மீது இருக்கும் விருப்பம் போய் விடும். (யோகம் – ஒன்றுவது )யோக முயற்சிகள் மீது விருப்பம் உண்டாகும். இந்த விருப்பம் வந்துவிட்டால் மெய்யுணர்வு பிறக்கும் (மெய்யுணர்வு – இறைவன்).
அகப்பற்று – அகங்காரம் (நான்)
புறப்பற்று – மமகாரம் (எனது)
இதிலே கவனிக்க வேண்டியது, நான் என்ற அகங்காரம் வந்த பின்பே எனது என்ற மமகாரம் வரும்.
ஆனால் எனது என்ற மமகாரத்தை அழித்தால் தான் நான் என்ற மமகாரம் அழியும்.
எப்படியென்றால், நான் என்ற பிறகுதான் எனது அம்மா அப்பா எனது உடை எனது வீடு எனது சொத்து என்று பட்டியல் நீள்கிறது.
இந்த இரு பற்றுக்களும் இல்லாமல் போவது வீடு – இறைவனுடைய அடிகளோடு பொருந்துவது.
இவைகளை விட்டவரையே ஒழுக்கத்து நீத்தார் என்கிறார் வள்ளுவர்.
பனுவல் – நூல்
நூல் என்று பொதுவாகச் சொல்லுகிறார். எந்த நூல் என்று சொல்லவில்லை. ஏனென்றால் எல்லாச் சமய நூல்களும் துறவியினுடைய பெருமைகளையே கூறுகிறது. துறவியரிலே போலித் துறவியர் இருந்தாலும் உண்மைத் துறவிகளை இந்த உலகம் மதிக்கிறது. எல்லாச் சமயத்தினரும் மதிக்கின்றனர். அதையே வள்ளுவரும் கூறுகிறார்.
பனுவல் என்று நூலை எழுதியவர்களின் முடிவை (துணிவை) நூலின் மேல் ஏற்றிச் சொல்லுகிறார்.
The article was well written. Thank you for publishing this article