இதற்கு நமது உடலைப் பற்றிய புரிதல் அவசியம்.
நமது உடலின் முதல் கட்ட ஜீரண உறுப்பு வாய். இதனோடு இணைந்தது உதடு. உதட்டினுடைய உள் உறுப்பு மண்ணீரல். இது மண்ணின் அம்சத்தைக் கொண்ட உறுப்பாகும். நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த உற்பத்தி போன்ற பணிகளைச் செய்யக் கூடிய உறுப்பாகும். மண்ணீரல் அதிக வெப்பமடைவதால்தான் உதடு வெடிப்பு ஏற்படுகிறது.
இரண்டாம் கட்ட ஜீரண உறுப்பு இரைப்பை. இதனுடைய வெளிப்புற உறுப்பு வாய். இதுவும் மண்ணின் அம்சத்தைக் கொண்ட உறுப்பாகும். இரைப்பையின் பிரச்சனைகள் வாயில்தான் தெரியும். இரைப்பையில் கழிவுகள் தேங்கி இருப்பதால் வாய் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல் ஈறுகளில் இருந்து இரத்தம் அடிக்கடி வருவதாலும் வாய் துர்நாற்றம் வீசும்.
தீர்வு 1
- பசிக்கும் போது மட்டுமே உணவு உண்ண வேண்டும்.
- சாப்பிடும்போது உணவை நினைக்க வேண்டும். அப்போதுதான் உமிழ்நீர் சுரக்கும். வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது.
- சாப்பிட்டு முடிக்கும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாது. விக்கல் வந்தால் மட்டும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம்.
- முதல்கட்ட ஜீரண உறுப்பு வாய். எனவே பல்லினால் அரைத்து நன்கு கூழாக்கிய பிறகு உண்ணவேண்டும். ஜீரணம் வாயிலியே நடைபெற வேண்டும்.
- இவைகள் அனைத்தையும் கவனமாக பின்பற்றினால் இரைப்பையில் கழிவுகள் தேங்காது.
தீர்வு 2
இரவு நன்கு பல் துலக்கிவிட்டு சுமார் 10 ML நல்லெண்ணெய் வாயில் விட்டு மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தாடை வலிக்கும் வரை கொப்பளித்துக்கொண்டே இருக்க வேண்டும். பின்பு துப்பிவிட வேண்டும். வெதுவெதுப்பான உப்புத்தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதுவே ஆயில் புல்லிங் எனப்படுகிறது. இதை வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும் என ஹீலர்ஸ் கூறுகின்றனர். ஆனால் எனக்கு இரவு மட்டுமே நேரம் கிடைத்தது. நான் செய்தேன் குணமானேன். பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வருவது நின்றது. வாய்துர்நாற்றமும் போய்விட்டது.
நமது சித்த மருத்துவத்தைப் போற்றுவோம்! ஆனந்தமாக வாழ்வோம்!