அதிகாரம் – 3 குறள் – 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக் கொண் டற்று. விளக்கம்;- முதல் மூன்று குறள்களிலும் துறவிகளுடைய பெருமை பற்றிக் கூறுகிறார். துறவியினுடைய பெருமைதான் உலகிலுள்ள பெருமைகளை விட உயர்ந்தது என்று முதல் குறளிலே கூறினார். அந்தப் பெருமை எத்தனை மடங்கு உயர்ந்தது என்று இந்தக் குறளிலே கூறுகிறார். இந்த உலகம் தோன்றிய நாள்முதல் வாழ்ந்து மரித்தவர்களின் எண்ணிக்கையை கூற முடியுமானால், துறவிகளின் பெருமையும் அந்த அளவு உயர்ந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கணக்கிட முடியாதோ அதேபோல […]

Continue Reading

வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது? அதை எப்படி குணமாக்குவது?

இதற்கு நமது உடலைப் பற்றிய புரிதல் அவசியம். நமது உடலின் முதல் கட்ட ஜீரண உறுப்பு வாய். இதனோடு இணைந்தது உதடு. உதட்டினுடைய உள் உறுப்பு மண்ணீரல். இது மண்ணின் அம்சத்தைக் கொண்ட உறுப்பாகும். நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த உற்பத்தி போன்ற பணிகளைச் செய்யக் கூடிய உறுப்பாகும். மண்ணீரல் அதிக வெப்பமடைவதால்தான் உதடு வெடிப்பு ஏற்படுகிறது. இரண்டாம் கட்ட ஜீரண உறுப்பு இரைப்பை. இதனுடைய வெளிப்புற உறுப்பு வாய். இதுவும் மண்ணின் அம்சத்தைக் கொண்ட உறுப்பாகும். […]

Continue Reading

நீத்தார் பெருமை – முன்னுரை – பாயிரம்

கருப்பொருளாகிய பாயிரம் கேட்போருக்கு நுண்பொருளாகிய நூல் இனிது விளங்கும். துறவி – நீத்தார் – முற்றும் துறந்த முனிவர் அறம் பொருள் இன்பம் முதலாகிய பொருளை உள்ளவாறு உணர்த்துவர். இயற்கையிலே பொதிந்த இரகசியத்தை உடைய கடவுளைப்பற்றி முதலாவது அதிகாரத்திலே கூறினார். இயற்கையிலே பொதிந்த அறத்தைப் பாதுகாத்துக் கொள்ள மழை அவசியம் என்பதை வான்சிறப்பு என்ற அதிகாரத்திலே கூறிவிட்டார். இயற்கையிலே பொதிந்த இரகசியங்களை உலகத்தார்க்கு எடுத்துக்காட்டிய துறவிகளின் பெருமை பற்றி இந்த அதிகாரத்திலே கூறப்போகிறார். அதிகாரம் – 3 […]

Continue Reading

ம் என்ற எழுத்தின் சிறப்பியல்புகள்

உயர்வுச் சிறப்பும்மை இழிவுச் சிறப்பும்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை முற்றும்மை உயர்வுச் சிறப்பும்மை;- நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தானநல்கா தாகி விடின். இக்குறளில் நெடுங்கடல் என்று கூறாமல் நெடுங்கடலும் என்று அழுத்திக் கூறுகிறார். ம் என்ற எழுத்து கடலின் உயர்வைக் கூறுகிறது. கடல் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. திரளான மீனினங்கள், சங்கு, முத்து போன்றவை கடலிலே விளைகிறது. ஆகவே இங்கு உயர்வைச் சொல்ல வந்த படியால் இது உயர்வுச் சிறப்பும்மை. […]

Continue Reading

அதிகாரம் – 2 – குறள் – 20

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. விளக்கம்;- மேலே கூறிய ஒன்பது குறளிலும் நீர் இன்றி இந்த உலகம் அமையாது என்று சொன்னார். பத்தாவது குறளிலும் அதையே கூறுகிறார். யார்யார்க்கும் – உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லோருக்கும் மழை அவசியம் எனவே அடுக்கிக் கூறுகிறார். உலகம் (உலகியல்) – பொருள், இன்பம் இதையே குறிக்கும். உலகம் இயங்குவதற்கு பொருள் இன்பங்கள் தேவை. இதற்கு அடிப்படையான நீர் தேவை. எனவே நீரின்றி இந்த பொருள் இன்பங்கள் அமையாது. […]

Continue Reading

அதிகாரம் – 2 குறள் – 19

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம்;- தானம் – இல்லறம் தவம் – துறவறம் வானம் வழங்காதெனின் – மழை பெய்யாதாயின் மழை பெய்யாவிட்டால் இல்லறமும் துறவறமும் நிலைக்காது என்கிறார். அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை. மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை. தானம் என்பதின் விளக்கம்;- 1 அறவழியில் வந்த பொருளை 2. தக்கார்க்கு 3. உவகையோடு 4. கொடுக்க வேண்டும். இந்த நான்கும் சேர்ந்ததுதான் தானம். […]

Continue Reading

அதிகாரம் – 2 குறள் – 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. விளக்கம்;- தேவர்களுக்கும் மழை தேவை என்று கூறுகிறார். மழை பெய்யாது வானம் வறண்டு போகுமானால் கோவில்களிலே திருவிழாவும் (சிறப்பு) நடக்காது. அன்றாட பூசையும் நடக்காது. கோவில்களிலே இரண்டு விதமான வழிபாடு நடக்கும். நித்தியம் நைமித்திகம் நித்தியம் என்பதற்கு பூசனை என்று பெயர். நைமித்திகம் என்பதற்கு சிறப்பு என்று பெயர். நித்தியம் என்பது அன்றாடம் செய்யும் பூசை. நைமித்திகம் என்பது அன்றாடம் செய்யும் நித்திய பூசையிலே குறைவுகள் வரக்கூடாது […]

Continue Reading

அதிகாரம் – 2 – குறள் – 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். விளக்கம்;- நெடுங்கடல் என்றால் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. மழை இல்லாவிட்டால் புல்லும் முளைக்காது. என்று கடந்த குறளிலே சொன்னார். இந்தக் குறளிலே நீர் நிரம்பியிருக்கிற கடலுக்கும் மழை தேவை என்கிறார். மழை இல்லாவிட்டால் கடலும் கெடும் என்கிறார். நீர்மை – தன்மை, இயல்பு. எழிலி – மேகம். தடிந்து – முவந்து, அள்ளி. இரண்டு வழிகளில் மேகம் தண்ணீரை எடுக்கும். ஒன்று மேகம் […]

Continue Reading

அதிகாரம் – 2 – குறள் – 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது. விளக்கம்;- விசும்பு – வானம், ஆகாயம் விசும்பின் துளி – மழை மற்று, ஆங்கே என்ற சொற்களுக்கான விளக்கத்தை கடந்த குறளிலே பார்த்தோம். தாவரம் ஓரறிவுள்ள உயிர். அந்த தாவர இனத்துக்குள்ளே மிகவும் தாழ்ந்தது புல். தாவர இனத்திலே மிகவும் கீழ்மையானதும் புல்தான். இந்தப் புல்லும் மழைத்துளி இல்லாவிட்டால் முளைக்காது. பசும்புல்லினதும் தலை காண்பரிது என்று பரிமேலழகர் உரைக்குறிப்பு எழுதுகிறார். தாவர இனத்திலேயே மிகவும் கீழ்மையானது புல். […]

Continue Reading

அதிகாரம் – 2 குறள் – 15

அதிகாரம் – 2 குறள் – 15 கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை. விளக்கம்;- கெடுப்பதூஉம் – பூமியில் வாழ்வாரை பெய்யாது நின்று கெடுப்பது. பெய்யாது நின்று கெடுக்கும். மறுபடி பெய்து கொடுக்கும். இதுவே மழை. மழை பெய்யாமலே இருந்தால் வறட்சி ஏற்பட்டு உலகம் அழிந்து விடும். ஆனால், ஒருபக்கம் மழை பெய்து வெள்ளம் வந்து அழிந்தாலும் பூமியின்  மற்றொரு பகுதி அந்த மழையை வைத்து செழிப்பாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை […]

Continue Reading