அதிகாரம் – 5 – குறள் – 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. விளக்கம்;- துறந்தார் என்பவரே முற்றம் துறந்த துறவியாவார். முயல்வார் என்றார் துறவு நோக்கி முயற்சிக்கிறவர் ( வானப்பிரஸ்தன்) கடந்த குறளிலே கூறியதையே இந்தக் குறளிலும் கூறுகிறார். இல்லறத்தானை துறவியோடு ஒப்பிடவில்லை. வானப்பிரஸ்தனோடு ஒப்பிடுகிறார். முயல்வாருள் என்று பன்மையில் எதற்குக் கூறினாரென்றால் பல்வகைப்பட்ட மக்களும் துறவு நோக்கி முயற்சிக்கின்றனர். ஏதோ ஒன்றை துறக்கிறோம் என்றாலே துறவு நோக்கி முயற்சிக்கிறோம் என்று பொருள். நமக்குப் பிடித்த ஒன்றை நாமாக விடுகிறோம் […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன். விளக்கம்;- இருவிதமான பயன்கள்;- இம்மைப் பயன் – மனிதனுக்குக் கிடைக்கும் புகழ் இம்மைப் பயனாகும். மறுமைப் பயன் – சொர்க்கம், மோட்சம் என்று இரண்டும் மறுமைப் பயனாகும். சொர்க்கம்;- இன்னொரு புவனத்திலே வாழ்வது சொர்க்கம். தேவர்கள் முதலானோர் இங்கேதான் இருக்கின்றனர். மோட்சம்;- இறையடியைச் சேர்வது மோட்சம். ஞானியர் இங்கேதான் இருக்கின்றனர். கடந்த ஐந்து குறள்களிலும் கூறிய பதினொரு கடமைகளையும் செய்து மனைவியில் அன்பு கூர்ந்து பழியஞ்சிப் பொருள் […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது விளக்கம்;- அன்பு பண்பாகவும் அறம் பயனாகவும் இருப்பதே இல்லறம். அன்பும் அறனும் பண்பும் பயனும் மேலே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் கீழே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் இணைத்துப்பார்க்க வேண்டும். அதுபோலவே மேலே உள்ள இரண்டாவது சொல்லையும் கீழே உள்ள இரண்டாவது சொல்லையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதற்கு நிரல் நிறை என்று பெயர். இல்வாழ்க்கையில் அன்பே முக்கியம். கணவர் மனைவியிடத்திலும் மனைவி கணவரிடத்திலும் அன்பாக இருப்பதை இரு […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். விளக்கம்;- கடந்த குறளிலே கூறிய பதினொரு கடமைகளைச் செய்வதற்குப் பொருள் தேவை. பொருள் இல்லாவிட்டால் அந்தக் கடமைகளைச் செய்ய முடியாது. பொருளைச் சம்பாதிக்கவே பிரம்மச்சரியம் என்ற காலப்பகுதியை இறைவன் ஒதுக்கிக் கொடுத்து “உன் காலிலே நீ நின்று நிதியைத் தேடு” என்ற ஒரு வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கிறார். பொருள் தேடுவது பதினொரு கடமைகளைச் செய்வதற்கு அல்ல. தேடுகிற பொருளைப் பழியஞ்சித் தேட வேண்டும். பழி – உலகம் […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை. விளக்கம்;- முதல் இரண்டு குறள்களிலே ஆறு கடமைகள் கூறினார். இக்குறளிலே ஐந்து கடமைகளை பற்றிக்கூறுகிறார். தென்புலத்தார் – பிதுர்த் தெய்வங்கள்;- தெற்கை இடமாகக் கொண்டு இருக்கிறவர்கள். இவர்கள் யாரென்றால் சில பிதுர்த் தெய்வங்கள். பிரம்ம தேவன் உலகத்தைப் படைக்கும் போது முதலில் கொஞ்சம் பேரை படைத்துவிட்டு என்னை நீங்கள் பூசிப்பீர்களாக என்று அவர்களை நியமித்தார். இப்படிப் படைக்கப்பட்டவர்கள் நாங்கள் ஏன் பிரம்மனை பூசிக்க வேண்டும்? நம்மை நாமே […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. விளக்கம்;- துறந்தார்க்கும் – இது துறவிகளைக் குறிக்கவில்லை. காக்க வேண்டியவர்களால் (பெரியவர்கள், குழந்தைகள்) காக்கப்படாமல் விடப்பட்டத் துறக்கப்பட்டவர்களை குறிக்கும். இப்படிப்பட்டவர்களை ஆதரிப்பது இல்லறத்தானின் கடமை. துவ்வாதவர்க்கும்– விதியினாலே வறுமையிலே இருப்பவருக்கு உணவு முதலிய மற்றவற்றைக் கொடுத்து இல்லறத்தார் ஆதரிக்க வேண்டும். இறந்தார்க்கும் – அந்நியர் எவராயினும் நம் வீட்டின் முன்பாக இறந்து அநாதையாகக் கிடந்தால் அவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராயினும் அந்த முறைப்படி நீர்க்கடன் செய்ய வேண்டும். […]

Continue Reading

அறத்துப்பால்

முன்னுரை;- பாயிரவியல் முடிந்து அறத்துப்பால் தொடங்குகிறது. அறம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் திருவள்ளுவர். தனிமனித வாழ்க்கை நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. பிரம்மச்சரியம் – கற்கும் பருவம் கிருகஸ்தம் (இல்லறம்) – வாழும் பருவம் வானப்பிரஸ்தம் – ஓயும் பருவம் முற்றாக விலகும் பருவம் – துறவறம் (சன்னியாசம்) இந்த நான்கு பகுதிகளுக்கும் அறம் சொல்வதை தமிழ் மூதாதையர்கள் மரபாக வைத்திருந்தனர். படிப்பு வாழ்க்கையின் ஆயத்த நிலை. எனவே திருவள்ளுவர் பிரம்மச்சரியத்தை நேரிடையாகக் கூறாமல் இல்லறத்திற்குள்ளே […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 51

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டார் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. விளக்கம்;- மனைவிக்கான இலட்சணத்தை இக்குறளில் வரையறை செய்கிறார். நல்ல மனைவியினிடத்தில் மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் இருக்க வேண்டும். மனைத்தக்க மாண்பு;- இல்லறத்திற்குரிய நற்பண்பு இல்லறத்திற்குரிய நற்செய்கை இந்த இவ்விரண்டு குணங்களும் இல்லாதவள் மனைவியல்ல. கணவருடைய வருமானத்துக்குள்ளே வாழ்கிறவளே பெண். இன்றைய உலகமயமாக்கலில் இந்தப்பண்பு காணாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன் நான். ஆடம்பரத்திற்காக மற்றவர்களைப் பார்த்து நாம் வாழப் பழகுகிறோம். இது தவறு. நற்பண்பு;- (நல்ல) துறவிகளைப் […]

Continue Reading

வாழ்க்கைத் துணை நலம்

முன்னுரை;- அறம் இரண்டு கூறாகப் பிரிக்கபடுகிறது. இல்லறம் – பற்றுவதும் அறம் துறவறம் – பற்றை விடுவதும் அறம் இல்லறத்திலே முதிர்ந்தவர்களுக்குத்தான் துறவறம். எனவே முதலில் பயிலப்பட வேண்டியது இல்லறம். பெரும்பான்மையானோருக்க உரியதும் இல்லறமே. துறவறம் என்பது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது. இல்லறத்திலே முதிர்ச்சியடைய வேண்டும். அந்த முதிர்ச்சியைத் தருவது திருக்குறளின் இல்லறவியல். திருக்குறள் மனிதனைச் செதுக்க வல்லது. இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகளை வகுக்கிறார் வள்ளுவர். இந்தக் கடமைகள் அனைத்தையும் அறத்தின் வழியே நின்று செய்ய வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 40

செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. விளக்கம்;- செய்ய வேண்டியது அறன்; ஒழிக்க வேண்டியது தீவினை. செயற்பாலதோரும்; குயற்பாலதோரும் – ஓரும் என்பது அசைச் சொல். எனவே இதற்குப் பொருள் கிடையாது. ஓசையை நிறைவு செய்ய வந்த சொல். அறனே என்பது தேற்ற நிலை ஏகாரம். தேற்றநிலை ஏகாரம் என்றால் உறுதிப்படுத்த வந்த ஏகாரம். முதல் அடியில் போட்ட ஏகாரத்தை அடுத்த அடியில் நம்மைப் போடச் சொல்லி விட்டு விடுகிறார் வள்ளுவர். எனவே உயர்பாலதோரும் […]

Continue Reading