மக்கட்பேறு

முன்னுரை;- இறைவன் நமது வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துள்ளார். குழந்தைப்பருவத்திலிருந்து படிப்படியாக நாம் வளர்ந்து வருகிறோம். அப்படி வளர்ந்து வரும்போது நமது ஆசைகளும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. குழந்தையாயிருக்கும் போது பொம்மை முதலிய விளையாட்டுப்பொருட்கள் மீது ஆசைப்படுகிறோம். அதை விடவும் கொஞ்சம் வளர்ந்த பின்பு நடைவண்டி, பின்பு மிதிவண்டி, பின்பு உந்துருளி (இரண்டு சக்கர வாகனம்) பின்பு திருமணம், மனைவி என்று ஆசைகள் அந்தந்த வயதுக்கேற்ப தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதில் தான் வாழ்க்கையினுடைய தொடர்ச்சியும் சுகமும் இருக்கின்றன. விவிலியமும் […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. விளக்கம்;- மங்கலம் – நன்மை ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மை என்பது நற்குண நற்செய்கையோடு கூடிய மனைவி கிடைப்பதுதான். இப்படிப்பட்ட மனைவி கிடைத்த வாழ்க்கைக்கு நன்கலமாக அமைவது நல்ல புதல்வர்களைப் பெறுதலாகும். மங்கலம் என்பது மனைமாட்சி நன்கலம் என்பது நன்மக்கட்பேறு – இதனை யார் சொல்வார்கள்? அறிந்தோர் சொல்வார்கள் என்று பரிமேலழகர் உரைக்குறிப்பிலே கூறுகிறார். குறளிலே அறிந்தோர் என்பது சொல்லப்படாமல் நிற்கிறது. இதை நாம்தான் வருவித்துக்கொள்ள வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 59

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. விளக்கம்;- ஒரு ஆண்மகன் எவ்வளவு பெரிய செல்வந்தனாயிருந்தாலும், மிகப் பெரிய கல்வியறிவைப் பெற்றிருந்தாலும், பெரிய பதவியிலிருந்தாலும், பெரிய புகழ் பெற்றவனாயிருந்தாலும் அவனுக்கு வாய்த்த மனைவி சரியில்லையென்றால் அவனால் வீதியிலே தலை நிமிர்ந்து நடக்க முடியாது. நமக்கு எதிரானவர்கள் நம் மீது பொறாமை கொள்பவர்கள் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களையே இகழ்வார் என்கிறார் வள்ளுவர். இவர்களே கீழ்மக்கள். இப்படிப்பட்டவர்கள் நம்மை எங்கே வீழ்த்தலாம் […]

Continue Reading

அதிகாரம் – 6 குறள் – 58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. விளக்கம்;- இக்குறளில் பெற்றார், பெறுவர் என்ற சொல் அந்தரத்தில் நிற்பதைப் போல இருக்கிறது. இதற்கு பரிமேலழகர் உரைக்குறிப்பிலே விளக்கம் தருகிறார். பெற்றாள் என்று நிற்கிற சொல் ஏதோ ஒன்றை அழைக்கிறது. எதைப் பெற்றாள் என்று கேள்வி வருகிறது. ஆகவே வழிபடப் பெற்றாள் என்பது சொல்லெச்சமாக வருகிறது என்று உரையாசிரியர் விளக்குகிறார். வழிபடுதல் என்ற சொல் இல்லாமல் பெற்றாள் என்ற சொல் பூரணப்படுவதில்லை. எனவே, வழிபடுதல் என்ற சொல் […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. விளக்கம்;- பெண்ணை வீட்டிற்குள் வைத்து பூட்டிவைத்தால் தான் அவளது கற்பைக் காக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர். இதற்கு நமது பாரதியாரின் பாடலையும் இணைத்து இக்குறளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம். நிலத்தின் தன்மை பயிருக்குள தாகுமாம்; நீசத்தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயிர் மக்களைப் பெற்றிடல் சால வேயரி தாவதொர் செய்தியாம்; குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்; கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 56

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்;- கடந்த குறளிலே பெண்ணுக்குக் கிடைத்த ஆற்றல் பற்றி பார்த்தோம். அந்த ஆற்றலை வைத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வி வருகிறது. எனவே அதற்கான பதில் என்னவென்று பார்க்கலாம். பெண் கற்புள்ளவளாக இருப்பதற்கு கணவனே காரணம். எனவே, பெண்ணானவள் கணவராலே ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தினாலே கற்பைப் பெற்று கற்பினாலே ஆற்றல் பெற்று அந்த ஆற்றலினாலே தன் கணவனையும் காப்பாற்றுவாள். தற்காத்து – கற்பினால் கிடைக்கிற ஆற்றலினாலே தன்னையும் […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 55

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. விளக்கம்;- பெண்(மனைவி) தெய்வத்தைக் கூடக் கூப்பிடமாட்டாள் தன் கணவனையே தொழுவாள். பெண் உணர்வு சார்ந்து இயங்குபவள். எனவே தன்னை அடக்கி ஒடுக்கி ஒருநிலைப்படுவாளானால் இயற்கை அவளுக்குக் கட்டுப்பட்டு நிற்கும். ஏவல் செய்யும். ஆண்கள் அறிவு சார்ந்து இயங்குவர். எனவே அவர்களால் ஒருநிலைப்படுத்த முடியாது. புத்தி அதிகமாகும் போது உணர்வு குன்றும். உணர்வு குன்றும் போது ஒழுக்கம் பேண முடியாது. அந்த இடத்தில் பெண்தான் ஆணைக் காப்பாற்ற முடியும். […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். விளக்கம்;- கற்பு என்றால் அது பெண்ணுக்குரிய விஷயம். எப்படியென்றால் திருமணமான பிறகு கணவரைத் தவிர வேறு யாரையும் நினையாமல் உறுதியோடு வாழ்ந்துவிட வேண்டும். கம்ப இராமாயாணம் கூறும் இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய பின் சீதை இவர்தான் என் மணாளன் என்று அந்த விநாடியிலேயே உறுதி கொண்டாள். அந்த உறுதியோடு வாழ்ந்தாள். அதுவே கற்பு. பெண்ணானவள் கற்பு தவறினால் குடும்பக்கட்டமைப்பு உடையும். ஏனென்றால், குழந்தையைப் பெற்றெடுக்கக் […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. விளக்கம்;- கடந்த குறளில் கூறியதையே அழுத்தமாகக் கூறுகிறார். முதல் குறளில் கூறிய நற்குண நற்செய்கையோடு ஒரு மனைவி அமைந்துவிட்டால் அந்த மனிதனுக்கு இல்லாதது எது? மனைவி சரியாக அமையப்பெற்ற கணவன் ஒன்றுமில்லாதவன் என்றாலும் எல்லாம் உள்ளவன் தான். இதையே மாற்றியும் கூறுகிறார். எல்லா செல்வ வளங்களும் இருந்தும் மனைவி மட்டும் அமையவில்லையென்றால் உள்ளது என்ன? என்று கேட்கிறார் வள்ளுவர். குணி – பொருள் குணத்தைக் கொண்ட பொருள் […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 52

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். விளக்கம்;- முதல் குறளில் கூறியதை வலியுறுத்துகிறார். மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் ஒரு பெண்ணிடம் இல்லையென்றால் என்ன செய்வது? மனைவி இப்படி வாய்த்துவிட்டால் அந்தக் கணவரிடம் என்ன செல்வ வளம் இருந்தும் ஒன்றுமில்லை. ஒரு பெண்ணினுடைய இழிவு கண்டு தமிழ் புலவர் ஔவையார் பாடிய பாடல். இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன்வாங்கி விருந்து வந்த தென்று விளம்ப – வருந்தி ஆடினாள், பாடினாள், ஆடிப் பழமுறத்தால் […]

Continue Reading