அதிகாரம் – 7 குறள் – 70

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை எனநோற்றான் கொல்லெனும் சொல். விளக்கம்:- கடைசிக்குறளிலே தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடனைச் சொல்லுகிறார். பாரிசேட நியாயம் என்று ஒரு நியாயம் இருக்கிறது. சேடம் என்றால் மிச்சம் என்று பொருள். ஒரு விடயம் சொன்னால் அதன் மிகுதியை வைத்து இன்னொரு விடயத்தைக் கண்டுபிடிப்பது. இதன்படி இக்குறளிலே தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையைக் கூறியிருக்கிறார். தாய்க்கு மகன் செய்ய வேண்டிய கடமையை ஏன் கூறவில்லை என்ற கேள்வி வருகிறது. இதற்கான பதிலைப் […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். விளக்கம்:- பெண்களுக்குப் பிரசவ வேதனை என்பது மிகப்பெரிய வலியாகும். வலிகளின் உச்சமே பிரசவ வலி. இந்த வலியைத் தாங்கிக் கொண்டுதான் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர். யாராவது ஒருவர் நமக்குத் தாங்க முடியாத வலிகளைக் கொடுத்தால் அதற்குப் பழிக்குப் பழி வாங்குவது மனித இயல்பு. ஆனால், பிரசவ வலியைத் தாங்கிய பெண் குழந்தை பிறந்தவுடன் அதை நினைத்து ஆனந்தமடைகிறாள். இதுவே தாய்மை. கிறித்தவ மறைநூல் இதையே இப்படிக் கூறுகிறது. […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. விளக்கம்:- பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான் – நீதிமொழிகள் 17.28 கல்லாதவனும் நனிநல்லன் என்கிறார் வள்ளுவர். கற்றார்முன் சொல்லாதிருக்கப் பெறின். ஞானிகளுக்கு இலட்சணமே அதிகம் பேசாதிருக்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் மிகப்பெரிய விஞ்ஞானிகள் அவர்களது கண்டுபிடிப்புகளால் இந்த உலகம் இன்றைக்கு ஆசீர்வாதமாயிருக்கிறது. அனுதின வாழ்க்கைக்கு அவர்களது கண்டுபிடிப்புகள் எத்தனை தேவையாக இருக்கிறது. […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 67

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். விளக்கம்:- கடந்த ஆறு குறள்களிலும் முறையே புதல்வரைப் பெறுவதால் கிடைக்கும் மறுமைப்பயன், இம்மைப்பயன் பற்றிக் கூறிவிட்டார். இந்தக் குறளில் தந்தை பெற்ற பிள்ளைகளுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று கூறுகிறார். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி – தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது. அவையத்து முந்தி இருப்பச்செயல் – கற்றறிந்தவர்கள் இருக்கும் சபையில் பிள்ளை சான்றோனாகவும் தறைசிறந்த கல்வியாளனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கச் செய்வதே […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 66

குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். விளக்கம்:- கடந்த குறளில் பொதுப்படக் கூறியதை இக்குறளிலே சிறப்பு வகையால் கூறுகிறார். ஏனென்றால் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்கிற இன்பத்திற்கு நிகரான இன்பமில்லை. அவ்வளவு இனிமைச் சிறப்புடையது. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்தது முத்தமிழ். தமிழினுடைய சிறப்பெழுத்து ழ் – ழகரம். இந்த எழுத்து வேறெந்த மொழிகளிலும் இல்லை. இசைத்தமிழுக்கு தமிழர்கள் மூன்று கருவிகளை எடுத்துக்கொண்டனர். குழல் – காற்று வாத்தியம் யாழ் – […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. விளக்கம்:- கடந்த குறளிலே பிள்ளையினுடைய கைதொட்ட உணவு அமிழ்தத்தை விடவும் இனியது என்று கூறினார். இக்குறளிலே பிள்ளையினுடைய உடலைத்தொடுவது உடலுக்குக்கிடைக்கக் கூடிய முதன்மை இன்பம் என்று கூறுகிறார். பிறந்த குழந்தையிலிருந்து இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை பார்த்த உடனே கட்டி அணைத்து முத்தமிடத் தூண்டுவது அனைவருக்கும் இயல்பாகும். இதையே மக்கள்மெய்தீண்டல் உடற்கின்பம் என்று கூறுகிறார். வினைமாற்று:- முதலில் உடற்கின்பம் பற்றிச் சொல்லிவிட்டார். அடுத்து செவிக்கு இன்பம் பற்றிக் கூறப்போவதால் […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். விளக்கம்:- உவமை ஒரு உண்மையை விளங்கப்படுத்த உதவும். கிளி போல பேசினாள். குயில் போல பாடினாள். உண்மை நிரூபணத்துக்கு உவமையும் ஒரு சான்றாகும். “உவமை என்பது ஒருபுடை ஒப்பே” இது இலக்கணச் சூத்திரம். அதாவது உவமை ஒரு உண்மையினுடைய ஒரு பகுதியை மட்டுமே விளங்கப்படுத்தும். குயில் போலப் பாடினாள் அதாவது அவளது குரல் குயிலின் குரலைப்போல இனிமையுடையது மட்டுமே. குயில் கருப்பு நிறமுடையது. எனவே பாடுகிறவளும் கருப்பாக […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். விளக்கம்;- முதல் குறளிலே குழந்தைப் பேற்றினுடைய சிறப்பைச் சொன்னார். இரண்டாவது குறளிலே அந்தப் பிள்ளைகளைப் பெறுவதினாலே கிடைக்கக்கூடிய பயனில் ஒன்றைச் சொன்னார். இந்தக் குறளிலும் இதையே வலியுறுத்துகிறார். உலகியலிலே பொருள் அவசியம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்று திருவள்ளுவரே கூறுகிறார். பொருளோ பணமோ நம்மிடம் நிலைக்க வேண்டுமானால் அதைப் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் அது நிலைக்கும். பிரபல எழுத்தாளர் ரோண்டா பைர்ன் எழுதிய நூல் மாயாஜாலம். […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம்;- எழுபிறப்பு என்பதிலே இரு அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது அர்த்தம்;- ஒருவனுடைய சாயல் ஏழு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. ஏழாவது தலைமுறையிலே தலைமுறை மாற்றப்பட்டுவிடும். இப்படி ஒருவனுடைய சாயல் ஏழாம் தலைமுறையோடு முடியப்போகிறது. எழுபிறப்பு என்பது ஒருவனுடைய தொடர்ச்சியான அவன் நிலை நிற்கக்கூடிய ஏழு இடங்கள். ஏழுதலை முறை வரைக்கும் இவனுடைய அடையாளம் மற்றும் பண்பு இருக்கும். இரண்டாவது அர்த்தம்;- பிறப்பேழாவன;- ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம் நீர்ப்பறவை […]

Continue Reading