அதிகாரம் – 10 – குறள் – 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. விளக்கம்:- ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் – ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல – இவையிரண்டும் அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. அணி (அணிகலன்) என்றால் அழகைக் கூட்டிகாட்டுவது. இக்குறளில் இன்சொல்லும் பணிவும்தான் அணி என்று வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய வார்த்தையில், செயலில், எண்ணத்தில்கூட பணிவு இருந்தால் எல்லோருக்கும் அவரைப்பிடித்துப் […]
Continue Reading