நடுவு நிலைமை

அஃதாவது, பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்த வழி சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது. மூன்று வகையான உறவு நிலைகள் உண்டு. இந்த மூவரிடத்தும் நடுவுநிலைமையோடு நடந்துகொள்ளும் திண்மை இருக்கவேண்டும். இம்மூவரையும் சமமாக நினைத்து நடத்த வேண்டும். ஒருவர் செய்த நன்மையை நினைத்தால் இந்த இடத்தில் நடுவுநிலைமை சிதையும். எனவேதான் செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திற்குப் […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. விளக்கம்:- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் – பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை – ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. நன்றி மறந்தவருக்கு எந்த வகையிலும் உய்வில்லை. இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு உய்வே இல்லை. பெரிய அறங்களைச் சிதைத்தல் என்றால் என்ன? இத்தகையப் பாவங்களைச் செய்தவர்களுக்குக் கூட பிராயச்சித்தம் உண்டு. அதைப்பற்றி […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் -109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும். விளக்கம்:- கொன்று அன்ன இன்னா செயினும் – தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர் பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும், அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் – அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். நமக்கு நண்பராக இருப்பவர்தான் பகைவராகவும் மாற முடியும். எனவே அந்த நண்பர் ஒருநாள் நன்மை செய்திருப்பார். மறுநாள் நம்மைக் கொல்வதற்குச் சமமான இன்னா (தீமை) […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. விளக்கம்:- நன்றி மறப்பது நன்று அன்று – ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று – அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன். ஒரே மனிதர் நன்றிக்கு உரிய ஒன்றையும் செய்வார். நன்று அல்லாதவற்றையும் செய்வார். எனவே ஒருவர் செய்த நன்றியை எப்போதும் நினைத்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நன்றி அல்லாததை உடனடியாக மறந்துவிட […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. விளக்கம்:- தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு – தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் – எழுமையினுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பவர் நல்லோர். இக்குறளின் விளக்கத்தைப் படிக்கும் முன்பதாக ‘எழுமை’ ‘எழுபிறப்பு’ என்பதற்கான விளக்கத்தை குறள் 62 ல் விளக்கமாக எழுதியுள்ளேன். அதனை வாசித்த பின்னர் இக்குறளுக்கான விளக்கத்தை வாசிக்கவும். https://queenofpearlcity.com/ ஒரு மனிதனுடைய அடையாளம் ஏழு பிறவிகளுக்கும் தொடரும். ஒரு […]

Continue Reading

அதிகாரம் -11 – குறள் – 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயர் நட்பு. விளக்கம்:- துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க – துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க – அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவாதொழிக. நாம் துன்பப்படும் காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்தவரை எக்காலத்திலும் மறக்கக்கூடாது. இதைக் கட்டளையாகவே கூறுகிறார் வள்ளுவர். இப்படிப் பெற்ற உதவியைப் போற்றவேண்டும். கடந்த இரு குறள்களிலும் பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவிக்குப் பெருமையுண்டு என்று கூறினார் அல்லவா? […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 105

உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. விளக்கம்:- உதவி உதவி வரைத்து அன்று – கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து – அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. நாம் செய்த உதவி எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதனைப் பெற்றுக் கொண்டவர் தரமில்லாதவராயிருந்தால் அந்த உதவிப் போற்றப்படுவதில்லை. ஆகவே உதவி செய்வது பெரிதில்லை. அந்த உதவியைப் பெற்றவர் அறிவுடையவராக (சால்பு […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். விளக்கம்:- தினைத்துணை நன்றி செயினும் – தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் – அதனை அவ்வளவிற்றாகக் கருதாது , பனையளவிற்றாக்க் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவியின் தரம் தங்கியிருக்கிறது. இதற்கு அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த வரலாறு மிகச்சிறந்த உதாரணமாகும். மலையுச்சியில் இருந்த நெல்லிக்கனியை உண்டால் இருநூற்று நாற்பது வருடம் உயிர் வாழலாம் என்று தெரிந்தும் […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம்:- பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – ‘இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும்,’ என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின், நன்மை கடலின் பெரிது அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் எந்தப் பயனும் வராது என்று தெரிந்தும் செய்கிறோம் என்றால் அந்த உதவி மிகவும் உயர்ந்த உதவியாகும். இப்படி நாம் உதவி செய்தால் […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. விளக்கம்:- காலத்தினால் செய்த நன்றி – ஒருவனுக்கு இறுதி வந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம், சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது – தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. நன்றி – உபகாரம். ஒருவர் உயிராபத்தில் இருக்கும்போது நாம் செய்கிற உதவி காலத்தில் செய்த உதவியாகும். அந்த உதவி எத்தனைச் சிறிதாயிருந்தாலும் அந்தக் காலத்தை நோக்கும்போது இவ்வுலகத்தை விட மிகவும் […]

Continue Reading