அதிகாரம் – 12 – குறள் – 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். விளக்கம்:- பிறவும் தமபோல் பேணிச் செயின் – பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய வாணிகம் ஆம். வாணிகம் என்பதற்கு வியாபாரம், இலாபம் என்று அர்த்தங்கள் உண்டு. இங்கே இலாபம் என்றால் என்ன? என்பதற்கு அர்த்தம் சொல்லுகிறார் வள்ளுவர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களையும் தம்போல நினைத்து குறைவான இலாபம் வைத்து விற்பனைச் செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான இலாபம் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். விளக்கம்:- செப்பம் சொற்கோட்டம் இல்லது – நடுவுநிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் – அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின். கடந்த குறளிலே கூறிய கருத்தே இக்குறளிலும் வருகிறது. வீட்டிலோ அல்லது நீதிமன்றத்திலோ வழக்கு என்று வந்துவிட்டால் நீதிபதி தனது தீரப்பை உறுதியாக் கூறவேண்டும். எந்த வார்த்தையையும் புரட்டாமல் சொல் தவறாமல் கூறவேண்டும். மனதிலே புரட்டு இருந்தால் சொல்லிலும் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம்:- சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் – முன்னே தான் சமமாக நின்றுபின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல, அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். கோல் – தராசு. தராசின் முள் சமனாக நின்ற பின்னரே எடைக்கற்களையும் பொருளையும் வைத்து நிறுக்க வேண்டும். இதில் தராசுக்கோல் முதலாவது தன்னைச் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 117

கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. விளக்கம்:- நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை, கெடுவாக வையாது உலகம் – வறுமை என்று கருதார் உயர்ந்தோர். நடுவு நிலைமையோடு இருந்தும் வறுமை வந்தால் அதற்குத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்று இக்குறளில் பார்க்கலாம். ஊழின் காரணமாக வறுமை வந்தால் கவலைப்படக்கூடாது. ஏனென்றால், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். எனவே உயர்ந்தவர்கள் நடுவுநிலைமையோடு இருப்பவர்கள் வறுமையில் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 116

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். விளக்கம்:- தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் – ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், யான் கெடுவல் என்பது அறிக – அந்நினைவை ‘யான் கெடக் கடவேன்’ என்று உணரும் உற்பாதமாக அறிக. நன்மைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘ சகுனம்’ என்று அழைக்கப்படும். தீமைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘உற்பாதம்’ என்று அழைக்கப்படும். நமது […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் -115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம்:- கேடும் பெருக்கமும் இல் அல்ல – தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி- அவ்வாற்றையறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. நடுவுநிலைமை தவறி ஏன் சிலர் வாழ்கின்றனர்? இக்கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர். நடுவுநிலைமை தவறி நடப்பவர்கள் தமது வாழ்வு தமது கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டுள்ளனர். அது உண்மையல்ல. மனித வாழ்க்கையில் வரும் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். விளக்கம்:- தக்கார் தகவிலர் என்பது – இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம், அவரவர் எச்சத்தால் காணப்படும் – அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். தக்கார் – நடுவு நிலைமை என்னும் தகுதியுடையவர். தகவிலர் – நடுவு நிலைமை என்னும் தகுதியில்லாதவர். எச்சம் – சந்ததி (பிள்ளைகள்). இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றால், இவர்களது சந்ததியைப் பார்த்தாலே […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். விளக்கம்:- நன்றே தரினும் – தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் – நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. திருக்குறளிலே ஆக்கம் என்ற சொல் சில இடங்களில் செல்வம் என்ற பொருளில் வரும். இக்குறளிலே ஆக்கம் என்பது செல்வமாகும். நடுவுநிலைமை தவறி வந்தச் செல்வம் நன்மையைத் தந்தாலும் கூட அதை நஞ்சென்று கருதி உடனே […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து. விளக்கம்:- செப்பம் உடையவன் ஆக்கம் – நடுவு நிலைமையை உடையவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. செப்பம் – நடுவுநிலைமை. ஏமாப்பு – பலம். நடுவுநிலைமை தவறாமல் சேர்த்த செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் பலத்தைக் கொடுக்கும். அறநெறி தவறிச் சேர்த்தச் செல்வம் அழிவையே தரும். எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து […]

Continue Reading