அதிகாரம் – 13 – குறள் – 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. விளக்கம்:- கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – அறக்கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெறியின்கண் சென்று. கதங்காத்து – கோபத்தைக் காத்துக் கொண்டு வெகுளி – கோபம் தருமம் எப்படிக் குறிப்பிட்ட ஒருவனைச் சென்று சேரலாம் என்று காத்திருக்குமாம். அது யாரிடம் சேரும்? என்பதற்கு இக்குறளில் […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. விளக்கம்:- தீயினால் சுட்ட புண் உள் ஆறும் – ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது – அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. முதல் ஐந்து குறள்களும் பொதுவான அடக்கம் பற்றிக் கூறின. ஆறாவது குறள் மெய்யடக்கம் பற்றிக் கூறியது. வார்த்தை அடக்கத்திற்கு மூன்று குறள்களை திருவள்ளுவர் […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். விளக்கம்:- தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின் – தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின், நன்று ஆகாது ஆகிவிடும் – அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். சொற்களைக் காத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை இக்குறளின் மூலம் சொல்லுகிறார். நாம் சொல்லுகின்ற சொல் ஒவ்வொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறைய அறச்செயல்கள் செய்தாலும் ஒரே ஒரு சொல் […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. விளக்கம்:- யாகாவாராயினும் நா காக்க – தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் – அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு நாமே அதிகாரியாக இருக்க வேண்டும். வார்த்தைகளைப் பேசுகின்ற போது அதன் பொருளும் சொல்லும் நமதுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல மேடைப் பேச்சிற்கும் பொருந்தும். வார்த்தைகள் நமக்கு […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. விளக்கம்:- ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமை போல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்க வல்லன் ஆயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. இயற்கையைக் கவனிப்பதே அறம். இதையே நமது முன்னோர்களும் செய்தார்கள். எனவே வள்ளுவரும் இக்குறளில் மெய்யடக்கத்திற்கு உதாரணமாக ஆமையை கூறுகிறார். ஒருமை – ஒரு பிறவி எழுமை – ஏழு […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. விளக்கம்:- பணிதல் எல்லார்க்கும் நன்றாம் – பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து – அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறோரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்கும் அடக்கம், பணிவு என்பது மிகவும் அவசியம். பணிவே அழகு தரும். ஆனால், பெருமிதத்துக்கு உரிய காரணங்கள் உள்ளவர் அடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. விளக்கம்:- நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப் பெரிது – மலையின் உயர்ச்சியினும் மிகப்பெரிது. திரியாது அடங்குதல் – பொறிகளால் புலன்களை நுகரா நின்றே அடங்குதல், ‘மலை’ ஆகுபெயர். அதிகார வைப்புமுறைப் படி இக்குறளைப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இல்லறத்தான் பொறிகளை (ஐம்புலன்களை) அனுபவிக்கவும் வேண்டும். அதே நேரம் தனதுக் கட்டுப்பாட்டுக்கு மீறியும் அனுபவிக்கக் […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். விளக்கம்:- அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – ‘அடங்குதலே நமக்கு அறிவாவது’ என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். அடக்கம் என்பது எல்லா அறங்களுக்கான ஆணி வேராகும். மனம், மொழி, மெய்கள் மூன்றனையும் தமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய அடங்குதலே நமக்குத் துணையாகிய அறிவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம்:- உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம். நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். […]

Continue Reading

அடக்கமுடைமை

அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம் போல் தம் குற்றமும் காணும் நடுவுநிலைமை உடையார்க்கு ஆதலின், இது நடுவு நிலைமையின் பின் வைக்கப்பட்டது. இல்லறவியலில் ஒரு தனிமனிதனுடைய வாழ்வைப் பற்றித் தொடர்ச்சியாக்க் கூறிவருகிறார். இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இனியச் சொற்களைப் பேசி விருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து நன்றியுணர்வுடன் இருந்து நடுவுநிலைமையுடன் இருந்து சமுதாயத் தொடர்பில் வந்த தனிமனிதன் மேலும் வளர வேண்டுமானால் மூன்றுக் குற்றங்களை நீக்க வேண்டும். […]

Continue Reading