சாதி ஒருமை என்றால் என்ன?

பலவற்றுக்கான குணத்தை ஒன்றிலே வைத்துக் கூறுவது. பலவற்றுக்குப் பொருந்துவதை ஒருமையிலே கூறுவது சாதி ஒருமை எனப்படும். உதாரணம்;- கோழி முட்டையிடும். இங்கே எல்லாக் கோழி இனங்களும் முட்டையிடும். குயில் கூவும். ஒரு குயில் மட்டுமல்ல எல்லாக் குயில்களும் கூவும். பப்பாளிப்பழம் இனிக்கும். எல்லாப் பப்பாளிப் பழங்களும் இனிக்கும். மாடு பால் தரும். ஒரு மாடு மட்டுமல்ல எல்லா மாடுகளும் பால் கொடுக்கும்.

Continue Reading

ம் என்ற எழுத்தின் சிறப்பியல்புகள்

உயர்வுச் சிறப்பும்மை இழிவுச் சிறப்பும்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை முற்றும்மை உயர்வுச் சிறப்பும்மை;- நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தானநல்கா தாகி விடின். இக்குறளில் நெடுங்கடல் என்று கூறாமல் நெடுங்கடலும் என்று அழுத்திக் கூறுகிறார். ம் என்ற எழுத்து கடலின் உயர்வைக் கூறுகிறது. கடல் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. திரளான மீனினங்கள், சங்கு, முத்து போன்றவை கடலிலே விளைகிறது. ஆகவே இங்கு உயர்வைச் சொல்ல வந்த படியால் இது உயர்வுச் சிறப்பும்மை. […]

Continue Reading

சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?

உதாரணம்;- துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை. இக்குறளிலே சொற்பொருள் பின்வருநிலையணி வருகிறது. அணி – அழகு தருவது. ஒரே சொல் ஒரே பொருளோடு திருப்பித் திருப்பி அடுக்கப்பட்டால் அது சொற்பொருள் பின்வருநிலையணி.

Continue Reading

ஆகு பெயர் என்றால் என்ன?

ஒன்றினுடைய பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர். ஆனால் தொடர்பு இருந்தால் தான் ஒன்றினுடைய பெயரை இன்னொன்றுக்குச் சொல்ல முடியும். தொடர்பு இல்லாததை சொல்ல முடியாது. உதாரணம்;- வானம் – மேகத்தின் இருப்பிடம். மேகம் – மழையின் இருப்பிடம். ஆகவே மழையை மேகம் என்றும் சொல்லலாம். மேகத்தை வான் என்றும் சொல்லலாம். மழையையும் வான் என்று சொல்லலாம்.

Continue Reading

ஏகதேச உருவகம்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது. ஆழி – கடல் இக்குறளிலே அறத்தை கடல் என்று திருவள்ளுவர் உருவகிக்கிறார். ஆனால், தாள் – திருவடி என்பதற்கு உருவகம் கூறவில்லை. இவ்வாறு ஆசிரியர் தான் எடுத்துக்கொண்ட இரண்டுக்கும் மேற்பட்ட பொருளிலே ஒன்றை மட்டுமே உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவகமாகும்.

Continue Reading

அசைச்சொல் என்றால் என்ன?

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். இக்குறளைப் படிக்கும் போது ‘கொல்’ என்ற சொல் இக்குறளோடு பொருந்தாமலும் அர்த்தம் புரியாமலும் இருக்கிறது. இதுவே அசைச்சொல் எனப்படும். புலவர்கள் செய்யுள் இயற்றும்போது வெண்பா இப்படி இருக்க வேண்டும். விருத்தம் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை உண்டு. இந்த வரையறைக்குள்ளே பாட்டு சொற்களை அமைக்க வேண்டும். சொல்லுக்குள்ளே பொருள் அமைக்க வேண்டும். பழைய காலத்திலே யாப்பு இருந்தது. ஓசை குழம்பாமல் எல்லா வரியும் இருக்க […]

Continue Reading

ஏகாரம் என்றால் என்ன?

ஏகாரம் இருவகைப்படும். பிரிநிலை ஏகாரம். தேற்ற ஏகாரம் இரு காரணங்களுக்காக இந்த ஏகாரத்தைப் போடலாம். ஒன்றிலே இருந்து ஒன்றைப் பிரிப்பதற்காகப் போடலாம். இதற்குப் பிரிநிலை ஏகாரம் என்று பெயர். உதாரணம்’- இவருள் அவரே நல்லவர். இவற்றுள் அதுவே சிறந்தது. 2. உறுதிப்படுத்துவதற்கு ஒரு ஏகாரம் உண்டு. அதுவே தேற்ற ஏகாரம் எனப்படும். உதாரணம்;- இறைவன் பெரியவன். இறைவனே பெரியவன். உலகம் பெரியது. உலகமே பெரியது.   திருவள்ளுவர் புலவர்.    திருவள்ளுவரே புலவர்.   ஆதிபகவன் முதற்றே […]

Continue Reading

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கு பொதுப்பெயர் என்ற ஒன்றும் இருக்கும். சிறப்புப் பெயர் என்ற ஒன்றும் இருக்கும். இவ்விரு பெயர்களையும் சேர்த்துச் சொல்வதே இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகும். விளக்கம் ;- பூ என்பது பொதுப்பெயர். இந்த பொதுப்பெயரோடு மல்லிகை என்ற சிறப்புப்பெயரையும் சேர்த்துச் சொல்லும்போது அது மல்லிகைப்பூ என்று இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகிறது.

Continue Reading

இலக்கணம்

உவமை என்றால் என்ன? உவமை சொல்லுகிற பொழுது உவமை பொருளை விடவும்  உயர்ந்ததாய் இருக்க வேண்டும். உவமையின் ஒரு கூறுதான் பொருளோடு பொருந்தும். “போல” என்ற உவம உருபு வருவது உவமை. “போல” என்ற உவம உருபை சொல்லாமல் விடுவது எடுத்துக்காட்டு உவமை. உதாரணம்;- குயில் போலப் பாடினாள். நீலோற்பவ மலரைப் போல கண்களை உடையவள். கிளி போலப் பேசினாள்.

Continue Reading