எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்?

கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் வீட்டிலேயே அரைத்த கடலை மாவு சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தயிர் அல்லது தேங்காய் உடைத்த தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக தண்ணீர் சேர்க்கவேண்டாம்.  முகத்தை சுத்தம் செய்துவிட்டு துடைத்தபின்பு இக்கலவையை முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய வேண்டும். பலன்கள்:- முகப்பருக்கள் வராது. நாள்பட்ட கரும்புள்ளிகள் மறைந்துவிடும். நிறம் கூடும். […]

Continue Reading

வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது? அதை எப்படி குணமாக்குவது?

இதற்கு நமது உடலைப் பற்றிய புரிதல் அவசியம். நமது உடலின் முதல் கட்ட ஜீரண உறுப்பு வாய். இதனோடு இணைந்தது உதடு. உதட்டினுடைய உள் உறுப்பு மண்ணீரல். இது மண்ணின் அம்சத்தைக் கொண்ட உறுப்பாகும். நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த உற்பத்தி போன்ற பணிகளைச் செய்யக் கூடிய உறுப்பாகும். மண்ணீரல் அதிக வெப்பமடைவதால்தான் உதடு வெடிப்பு ஏற்படுகிறது. இரண்டாம் கட்ட ஜீரண உறுப்பு இரைப்பை. இதனுடைய வெளிப்புற உறுப்பு வாய். இதுவும் மண்ணின் அம்சத்தைக் கொண்ட உறுப்பாகும். […]

Continue Reading

எண்ணெய் குளியல் 

எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் தான் சிறந்தது. வெப்ப பூமியான தமிழகத்தில் வாழும் நாம் வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வர வேண்டும். பெண்கள் என்றால் செவ்வாய் வெள்ளி, ஆண்கள் என்றால் புதன் சனி ஆகிய கிழமைகளில் குளிக்க வேண்டும். ஒருவருக்கு 60 மி.லி நல்லெண்ணெய் போதுமானதாக இருக்கும். இந்த எண்ணையை மிதமாக சூடுபடுத்தி அதில் பூண்டு 3 பல், 5 அல்லது 6 மிளகு, சிறிது சீரகம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய […]

Continue Reading