அதிகாரம் – 13 – குறள் – 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. விளக்கம்:- ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமை போல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்க வல்லன் ஆயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. இயற்கையைக் கவனிப்பதே அறம். இதையே நமது முன்னோர்களும் செய்தார்கள். எனவே வள்ளுவரும் இக்குறளில் மெய்யடக்கத்திற்கு உதாரணமாக ஆமையை கூறுகிறார். ஒருமை – ஒரு பிறவி எழுமை – ஏழு […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் -78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. விளக்கம்:- அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை – மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல், வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். பரிமேலழகர் எப்பொழுதும் குறளில் ஒரு சொல்லை மாற்றிப் போட்டு விளக்கம் தருவார். அப்படிச் சொல்லை மாற்றிப் போட்டு வாசித்தால் தான் நமக்கும் எளிதாக பொருள் புரிகிறது. எனவேதான் அகத்து அன்பு இல்லா […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 34

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. விளக்கம்;- திரிகரண சுத்தி – திரிகரணம் – மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்றிலே மனம் முக்கியம். அறத்தையே முதலாவது மனதிலே விதைக்க வேண்டும். மனதில் விதைத்த அறம் வார்த்தையாக வந்து செயலாக மாறும். விரும்புதல் – மனச்செயல் நீர – தன்மைய மனதை தயார் படுத்த வேண்டும். தர்மம் மிகுந்த மனதில் அழுக்கு படியாது. மனதிலே அறத்தைப் பதித்துவிடுவது […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள்  – 3

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். விளக்கம்;- மலர்மிசை என்றால் இறைவன் மலரின் கண்ணே இருப்பான் என்று அர்த்தம். இது எந்த மலர் என்று கேள்வி வருகிறது. மலர் என்று திருவள்ளுவர் எதைச் சொல்லுகிறார் என்றால் மனிதனுடைய  (மனதை) உள்ளக்கமலத்தை. மனித மனம் இயல்பாகவே மென்மையானது. அன்பானது. ஆகவே, இந்த அன்பான மனதுதான் இறைவன் அமருகின்ற இடம். இறைவனை நான் எந்த ரூபத்தில் நினைத்தாலும் அந்த ரூபத்தில் இறைவன் வேகமாக வந்து நமது உள்ளத்தில் […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள் – 1

கடவுள் வாழ்த்து;- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்கம்;- கடவுள் வாழ்த்து இருவகைப்படும். 1 ஏற்புடைய கடவுள் வாழ்த்து. 2. வழிபடுகிற கடவுள் வாழ்த்து சாத்வீகம் – அறம் இராட்சசம் – பொருள் தாமசம் – இன்பம் இம்மூன்றையும் பொதுப்பட வாழ்த்துகிறார் வள்ளுவர். எனவே, இது ஏற்புடைய கடவுள் வாழ்த்து. அட்சரங்களெல்லாம் அகரத்தை முதலாய்க் கொண்டிருக்கின்றன. முதல் என்றால் மூலம் என்று பொருள். உலக மொழிகளின் அத்தனை அட்சரங்களும் 4 வடிவங்களைக் கொண்டதாக […]

Continue Reading