அதிகாரம் – 13 – குறள் – 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. விளக்கம்:- பணிதல் எல்லார்க்கும் நன்றாம் – பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து – அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறோரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்கும் அடக்கம், பணிவு என்பது மிகவும் அவசியம். பணிவே அழகு தரும். ஆனால், பெருமிதத்துக்கு உரிய காரணங்கள் உள்ளவர் அடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். விளக்கம்:- அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – ‘அடங்குதலே நமக்கு அறிவாவது’ என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். அடக்கம் என்பது எல்லா அறங்களுக்கான ஆணி வேராகும். மனம், மொழி, மெய்கள் மூன்றனையும் தமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய அடங்குதலே நமக்குத் துணையாகிய அறிவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம்:- உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம். நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். […]

Continue Reading

அடக்கமுடைமை

அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம் போல் தம் குற்றமும் காணும் நடுவுநிலைமை உடையார்க்கு ஆதலின், இது நடுவு நிலைமையின் பின் வைக்கப்பட்டது. இல்லறவியலில் ஒரு தனிமனிதனுடைய வாழ்வைப் பற்றித் தொடர்ச்சியாக்க் கூறிவருகிறார். இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இனியச் சொற்களைப் பேசி விருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து நன்றியுணர்வுடன் இருந்து நடுவுநிலைமையுடன் இருந்து சமுதாயத் தொடர்பில் வந்த தனிமனிதன் மேலும் வளர வேண்டுமானால் மூன்றுக் குற்றங்களை நீக்க வேண்டும். […]

Continue Reading