அதிகாரம் – 11 – குறள் – 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். விளக்கம்:- தினைத்துணை நன்றி செயினும் – தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் – அதனை அவ்வளவிற்றாகக் கருதாது , பனையளவிற்றாக்க் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவியின் தரம் தங்கியிருக்கிறது. இதற்கு அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த வரலாறு மிகச்சிறந்த உதாரணமாகும். மலையுச்சியில் இருந்த நெல்லிக்கனியை உண்டால் இருநூற்று நாற்பது வருடம் உயிர் வாழலாம் என்று தெரிந்தும் […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் -100

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம்:- இனிய உளவாக இன்னாத கூறல் – அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று – இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். இனியவை – அறம். இன்னாதவை – பாவம். இப்படி அறம் பயக்கும் சொற்களும் பாவம் பயக்கும் […]

Continue Reading