அதிகாரம் – 8 – குறள் – 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. விளக்கம்:- அன்பின் வழியது உயிர்நிலை – அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது, அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன. இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் இல்லறத்தில் அன்பு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறுகிறது. ஆகவே அன்பு இல்லாமல் மனைவி குழந்தைகளிடம் அதைக் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. விளக்கம்:- யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கையகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப்புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்? புறத்துறுப்பெல்லாம் என்ன செய்யும் என்பதே பொருளாகும். என்ன என்பதற்கு எவன் என்பது பொருள். இது அக்காலத்தியப் பிரயோகம். நாம் கற்கின்ற அதிகாரம் இல்லறவியல். எனவே புறத்துறுப்பு என்பது உடலில் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் -78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. விளக்கம்:- அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை – மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல், வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். பரிமேலழகர் எப்பொழுதும் குறளில் ஒரு சொல்லை மாற்றிப் போட்டு விளக்கம் தருவார். அப்படிச் சொல்லை மாற்றிப் போட்டு வாசித்தால் தான் நமக்கும் எளிதாக பொருள் புரிகிறது. எனவேதான் அகத்து அன்பு இல்லா […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. விளக்கம்:- அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் – அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார், மறத்திற்கும் அஃதே துணை – ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. பகையை நீக்குவதற்கு அன்பு செய்வதே வழி. பகைக்குப் பகைச் செய்யச் செய்யப் பகை வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படிப் பகைத்துக் கொள்பவர்கள் இருவரும் நிம்மதியில்லாமல் மன அமைதியை இழந்து தவிப்பார்கள். தீமைக்குத் தீமைச் செய்தால் ஒருபோதும் நிம்மதி […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம்:- முதல் குறளிலே அன்புக்குப் பிரமாணம் சொன்னார். இரண்டாவது குறளிலே அன்புள்ளவனுக்குப் பிரமாணம் சொல்லுகிறார். அன்பின் அடையாளம் கொடுப்பது. இதுவே தானம். இந்த தானம் தான் இல்லறத்தின் அடையாளம். இல்லறத்திலே அன்பு வளர்வதற்குச் சான்று நம்முடையதை மற்றவருக்குக் கொடுப்பதே. இதற்கு உதாரணமாகப் பெண்களை எடுத்துக்கொள்ளலாம். பெண்கள் தன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை தனக்கு என்றே வைத்துக்கொள்வார்கள். அதை மற்றவருக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதற்கு அன்பு வரவேண்டும். அன்பிலார் […]

Continue Reading

அன்புடைமை

பரிமேலழகரின் அதிகார முன்னுரை அஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம், இனிது நடத்தலும், பிறவுயிர்கண்மேல் அருள் பிறத்தலும், அன்பின் பயனாகலின், இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத் துணை மேல் அன்பில் வழி இல்லற மினிது நடவாமை. “அறவோர்க் களித்தலு மந்ததண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலுந்த தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை” சிலப்பதிகாரம் – கொலைக்களக்காதை வரிகள் – 71 -73 என்பதனானும் அதனாலருள் பிறத்தல்” அருளென்னு மன்பீன் […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது விளக்கம்;- அன்பு பண்பாகவும் அறம் பயனாகவும் இருப்பதே இல்லறம். அன்பும் அறனும் பண்பும் பயனும் மேலே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் கீழே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் இணைத்துப்பார்க்க வேண்டும். அதுபோலவே மேலே உள்ள இரண்டாவது சொல்லையும் கீழே உள்ள இரண்டாவது சொல்லையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதற்கு நிரல் நிறை என்று பெயர். இல்வாழ்க்கையில் அன்பே முக்கியம். கணவர் மனைவியிடத்திலும் மனைவி கணவரிடத்திலும் அன்பாக இருப்பதை இரு […]

Continue Reading