அதிகாரம் – 12 – குறள் – 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம்:- சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் – முன்னே தான் சமமாக நின்றுபின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல, அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். கோல் – தராசு. தராசின் முள் சமனாக நின்ற பின்னரே எடைக்கற்களையும் பொருளையும் வைத்து நிறுக்க வேண்டும். இதில் தராசுக்கோல் முதலாவது தன்னைச் […]

Continue Reading