அதிகாரம் – 3 – குறள் – 30

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். விளக்கம்;- ஆதி காலத்திலே இறைவனின் பெயர்தான் அந்தணர் அந்தணர் – முற்றும் துறந்த துறவியையும் குறிக்கும். எப்படியென்றால், இந்த இறைவனோடு தங்களுடைய புலனடக்கி, யோகமுயற்சி செய்து, தத்துவ ஞானம் பெற்று, அவா அறுத்து இறைவனோடு சிலர் கலந்தனர். இப்படி கலந்துவிட்டதனால் இறைவனின் பெயராகிய அந்தணர் என்பது முற்றும் துறந்த துறவிகளுக்கு வந்தது. ஒன்றினுடைய பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர். எனவேதான் இறைவனின் பெயர் துறவிகளுக்கும் வந்தது. […]

Continue Reading

அதிகாரம் – 3 -குறள் – 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். விளக்கம்;- புலனடக்கம், யோக முயற்சி, தத்துவ ஞானம் போன்றவற்றை உடைய உண்மைத்துறவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று இக்குறளிலே கூறுகிறார். துறவியை அறிய வேண்டுமென்றால் பூமியிலே அவன் சொன்ன வார்த்தையின் நிறைவை வைத்தே உண்மைத் துறவியா? என்று கண்டுபிடிக்கலாம். நிறைமொழி மாந்தர் – துறவி. உதாரணம்;- சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்னும் துறவி கோவலன், கண்ணகி ஆகிய இருவரையும் மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். கவுந்தியடிகள் தவப்பேறு பெற்ற முற்றும் துறந்த […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள் – 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். விளக்கம் ;- ‘கற்றதனால் ஆயபயன் என்’ என்றால் கற்றதனால் ஆய பயன் என்ன? என்று அர்த்தம். திருக்குறள் இயற்றப்பட்டக் காலத்தில் ‘என்ன’ என்ற சொல்லுக்கு ‘எவன்’ என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அந்த ‘எவன்’ என்பதே ‘என்’ என்று ஆனது. இது ஆட்களைக் குறிக்காது. ‘கற்றதனால் ஆய பயன் என்’ என்று கேட்டதன் மூலம் கேள்வி கேட்கிற முறையில் பதில் சொல்லுகிறார் வள்ளுவர். கற்றதனால் ஆய பயன் […]

Continue Reading