அதிகாரம் – 14 – குறள் – 140

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார். விளக்கம்:- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் – உலகத்தோடு பொருந்த ஒழுகதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் – பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். உலகம் – உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. இதுவே தமிழர் பண்பாடு. உயர்ந்தவரோடு ஒத்து நட என்பதே இதன் பொருளாகும். ஒழுக்குவது – மேலேயிருந்து ஒழுகுவது. உயர்ந்தோரிடம் இருந்து வருவதற்குப் பெயரே ஒழுக்கம். ஆகவே உலகத்தோடொட்ட ஒழுகுவது என்றால் உயர்ந்தவர்களோடு ஒட்டுவதாகும். […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். விளக்கம்:- நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும். […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். விளக்கம்:- அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – ‘அடங்குதலே நமக்கு அறிவாவது’ என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். அடக்கம் என்பது எல்லா அறங்களுக்கான ஆணி வேராகும். மனம், மொழி, மெய்கள் மூன்றனையும் தமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய அடங்குதலே நமக்குத் துணையாகிய அறிவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். […]

Continue Reading

அடக்கமுடைமை

அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம் போல் தம் குற்றமும் காணும் நடுவுநிலைமை உடையார்க்கு ஆதலின், இது நடுவு நிலைமையின் பின் வைக்கப்பட்டது. இல்லறவியலில் ஒரு தனிமனிதனுடைய வாழ்வைப் பற்றித் தொடர்ச்சியாக்க் கூறிவருகிறார். இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இனியச் சொற்களைப் பேசி விருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து நன்றியுணர்வுடன் இருந்து நடுவுநிலைமையுடன் இருந்து சமுதாயத் தொடர்பில் வந்த தனிமனிதன் மேலும் வளர வேண்டுமானால் மூன்றுக் குற்றங்களை நீக்க வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 93

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். விளக்கம்:- முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி – கண்ட பொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் – பின் நண்ணிய வழி மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். கடந்த குறளில் கூறியதையே இக்குறளிலும் மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார். முதாலவது முகமலர்ச்சி இரண்டாவது இன்சொல் மூன்றாவது தான் கொடுத்தல். இவைகள் நமது மனதில் மிகவும் அழுத்தமாகப் பதியவேண்டும் என்பதற்காகவே […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்:- எலும்பு (முதுகெலும்பு) இல்லாத புழுவை வெயில் சுடுவது போல அன்பில்லாதவனை அறம் சுடும். முதுகெலும்பு இல்லாத புழுவால் வேகமாக ஓடமுடியாது. புழு மென்மையான உடலமைப்பைக் கொண்டது. ஆகவே வெயில் சுட்டு விடும் இதையே உவமையாகச் சொல்லுகிறார். என்பு இலதனை வெயில் போலக்காயும் – என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற் போலக் காயும், அன்பு இலதனை அறம் – அன்பில்லாத உயிரை அறக்கடவுள். என்பு (எலும்பு) […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 35

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம். விளக்கம்;- அறம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. துறவறம் இல்லறம் இல்லறத்தான் அறம் செய்யும் போது அவனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். பொருள் அளவு எல்லைக்கு ஏற்பச் செய்ய வேண்டும். துறவறத்தானுக்கு விரதங்கள் வகுக்கப்படுவதால் அவரது உடல் அளவு எல்லைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். எனவே இந்த இரண்டு பேரும் தனக்கு விதிக்கப்பட்ட அறங்களை அவர்களது எல்லைக்குட்பட்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு […]

Continue Reading

அதிகாரம் – 3 – குறள் – 23

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. விளக்கம்;- இருமை வகை தெரிந்து – பிறப்பு என்பது துன்பம்; வீடு என்பது இன்பம். இந்த இரண்டினுடைய கூறுபாடுகளை ஆராய்ந்து, என்பது இதன் பொருளாகும். இருமை என்பது இரண்டு என்ற எண்ணைக் குறித்து நிற்கிறது. எண்ணின் தன்மையைக் குறித்து நிற்கவில்லை. ஈண்டு அறம் பூண்டார் பெருமை – மேலே கூறிய பிறப்பை அறுக்க வேண்டும். அதற்கு முதலாவது பிறக்க வேண்டும். பின்பு தான் அறுக்க முடியும். அறுக்க […]

Continue Reading