அதிகாரம் – 14 – குறள் – 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம்:- அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை) ஆக்கம் – செல்வம் பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது. […]
Continue Reading