அதிகாரம் – 14 – குறள் – 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம்:- அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை) ஆக்கம் – செல்வம் பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது. […]

Continue Reading

அதிகாரம் – 13 – குறள் – 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம்:- உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம். நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். விளக்கம்:- நன்றே தரினும் – தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் – நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. திருக்குறளிலே ஆக்கம் என்ற சொல் சில இடங்களில் செல்வம் என்ற பொருளில் வரும். இக்குறளிலே ஆக்கம் என்பது செல்வமாகும். நடுவுநிலைமை தவறி வந்தச் செல்வம் நன்மையைத் தந்தாலும் கூட அதை நஞ்சென்று கருதி உடனே […]

Continue Reading

அறன் வலியுறுத்தல்

முன்னுரை அறத்தின் வலிமையை கூறுவது அறன் வலியுறுத்தல். அறம் பொருள் இன்பம் வீடு இதில் அறத்திற்கு ஏன் முதலிடம் என்றால், பொருள், இன்பம், வீடு ஆகிய மூன்றையும் தரவல்லது அறம். எனவே அதற்கு முதலிடம். பொருள் இருபயன்களைத் தரும். இம்மை வாழ்விலே செல்வத்தைக் கொண்டு தானம், தருமம் செய்வதனால் மறுமைப் பயனும் கிடைக்கும். காமம் – விருப்பம். இது இம்மைப்பயனை மட்டுமே தரும். தமிழர்கள் வரிசையை விரும்புகிறபடியால் வரிசைப்படிக் கூறுகிறார். அதிகாரம் – 4 – குறள் […]

Continue Reading