நடுவு நிலைமை

அஃதாவது, பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்த வழி சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது. மூன்று வகையான உறவு நிலைகள் உண்டு. இந்த மூவரிடத்தும் நடுவுநிலைமையோடு நடந்துகொள்ளும் திண்மை இருக்கவேண்டும். இம்மூவரையும் சமமாக நினைத்து நடத்த வேண்டும். ஒருவர் செய்த நன்மையை நினைத்தால் இந்த இடத்தில் நடுவுநிலைமை சிதையும். எனவேதான் செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திற்குப் […]

Continue Reading