அடக்கமுடைமை

அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம் போல் தம் குற்றமும் காணும் நடுவுநிலைமை உடையார்க்கு ஆதலின், இது நடுவு நிலைமையின் பின் வைக்கப்பட்டது. இல்லறவியலில் ஒரு தனிமனிதனுடைய வாழ்வைப் பற்றித் தொடர்ச்சியாக்க் கூறிவருகிறார். இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இனியச் சொற்களைப் பேசி விருந்தோம்புதல் முதலிய அறங்களைச் செய்து நன்றியுணர்வுடன் இருந்து நடுவுநிலைமையுடன் இருந்து சமுதாயத் தொடர்பில் வந்த தனிமனிதன் மேலும் வளர வேண்டுமானால் மூன்றுக் குற்றங்களை நீக்க வேண்டும். […]

Continue Reading