அதிகாரம் – 7 – குறள் – 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். விளக்கம்:- உவமை ஒரு உண்மையை விளங்கப்படுத்த உதவும். கிளி போல பேசினாள். குயில் போல பாடினாள். உண்மை நிரூபணத்துக்கு உவமையும் ஒரு சான்றாகும். “உவமை என்பது ஒருபுடை ஒப்பே” இது இலக்கணச் சூத்திரம். அதாவது உவமை ஒரு உண்மையினுடைய ஒரு பகுதியை மட்டுமே விளங்கப்படுத்தும். குயில் போலப் பாடினாள் அதாவது அவளது குரல் குயிலின் குரலைப்போல இனிமையுடையது மட்டுமே. குயில் கருப்பு நிறமுடையது. எனவே பாடுகிறவளும் கருப்பாக […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். விளக்கம்;- இல்லறத்தானுக்கு கிடைக்கும் பயன்களை இரண்டு பொருளில் கூறுகிறார் வள்ளுவர். சரியான முறையில் இல்லறம் நடத்தினால் அவன் மறுபிறவியிலே தேவர்களுக்குள் ஒருவனாக வைக்கப்படுவான். மற்றொன்று சரியான முறையில் இல்லறம் நடத்தும்போது இந்த உலகிலேயே தேவர்களுள் ஒருவனாகப் போற்றப்படுவான். எனவே, இல்லறத்தானுக்குக் கிடைக்கும் மறுமைப்பயன் தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுதல். இம்மைப்பயன் என்னவென்றால், அதுவே புகழ். இந்த இயலிலே இறுதியாக அதைப்பற்றி கூறப்போகிறார்.

Continue Reading