அதிகாரம் – 14 – குறள் – 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். விளக்கம்:- நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும். […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. விளக்கம்:- ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க – ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே – அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ‘இவற்றுள் இருமைக்கு துணையாவது யாது?’ என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது என்று முதல் குறளிலே படித்தோம். அப்படி உயர்வான ஒழுக்கத்தைப் பேணியும் வருந்தியும் கூட காக்க […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். விளக்கம்:- சிறுமையுள் நீங்கிய இன்சொல் – பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல், மறுமையும் இம்மையும் இன்பம் தரும் – ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். கடந்த குறளில் பிறருக்கு நாம் கூறும் சொல் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இக்குறளில் அந்தச் சொல்லின் பொருளும் கூட இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இம்மை, மறுமை என்று கூறுவதே மரபு. ஆனால் மறுமையை […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விளக்கம்:- வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை – விருந்தோம்பல் ஆகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று, விருந்தின் துணைத் தணை – அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. இக்குறளிலே திருவள்ளுவர் விருந்தை வேள்வி என்று கூறுகிறார். வேள்வி ஐந்து வகைப்படும். பிரம்ம யக்ஞம் தேவ யக்ஞம் பிதுர் யக்ஞம் பூத யக்ஞம் மானுட யக்ஞம் பிரம்ம யக்ஞம்:- பரம்பொருளைத் தேடி அதற்காகச் செய்யப்படுவது. […]

Continue Reading