அதிகாரம் – 5 – குறள் – 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். விளக்கம்;- இல்லறத்தானுக்கு கிடைக்கும் பயன்களை இரண்டு பொருளில் கூறுகிறார் வள்ளுவர். சரியான முறையில் இல்லறம் நடத்தினால் அவன் மறுபிறவியிலே தேவர்களுக்குள் ஒருவனாக வைக்கப்படுவான். மற்றொன்று சரியான முறையில் இல்லறம் நடத்தும்போது இந்த உலகிலேயே தேவர்களுள் ஒருவனாகப் போற்றப்படுவான். எனவே, இல்லறத்தானுக்குக் கிடைக்கும் மறுமைப்பயன் தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுதல். இம்மைப்பயன் என்னவென்றால், அதுவே புகழ். இந்த இயலிலே இறுதியாக அதைப்பற்றி கூறப்போகிறார்.

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 48

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. விளக்கம்;- துறவியை துறவியாக வைத்திருக்கிறவன் இல்வாழ்வான். உலக வாழ்விலே துறவியர் தனது தேவைகளைத் தேட ஆரம்பித்தால் அந்தத் துறவியும் இல்லறத்தானாக மாறிவிடுவார். சிறு கதையின் மூலம் இதை விளங்கிக் கொள்வது நலம் என்று நினைக்கிறேன். துறவி பூனை வளர்த்த கதை ஒரு ஊரிலே முற்றும் துறந்த துறவி இருந்தார். துறவி என்றால் கட்டிக் கொள்ள ஒரு கோவணம் துவைத்துப் போட ஒரு கோவணம் இதை மட்டுமே வைத்திருந்தார் […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. விளக்கம்;- துறந்தார் என்பவரே முற்றம் துறந்த துறவியாவார். முயல்வார் என்றார் துறவு நோக்கி முயற்சிக்கிறவர் ( வானப்பிரஸ்தன்) கடந்த குறளிலே கூறியதையே இந்தக் குறளிலும் கூறுகிறார். இல்லறத்தானை துறவியோடு ஒப்பிடவில்லை. வானப்பிரஸ்தனோடு ஒப்பிடுகிறார். முயல்வாருள் என்று பன்மையில் எதற்குக் கூறினாரென்றால் பல்வகைப்பட்ட மக்களும் துறவு நோக்கி முயற்சிக்கின்றனர். ஏதோ ஒன்றை துறக்கிறோம் என்றாலே துறவு நோக்கி முயற்சிக்கிறோம் என்று பொருள். நமக்குப் பிடித்த ஒன்றை நாமாக விடுகிறோம் […]

Continue Reading