அதிகாரம் – 8 – குறள் -78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. விளக்கம்:- அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை – மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல், வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். பரிமேலழகர் எப்பொழுதும் குறளில் ஒரு சொல்லை மாற்றிப் போட்டு விளக்கம் தருவார். அப்படிச் சொல்லை மாற்றிப் போட்டு வாசித்தால் தான் நமக்கும் எளிதாக பொருள் புரிகிறது. எனவேதான் அகத்து அன்பு இல்லா […]

Continue Reading

வாழ்க்கைத் துணை நலம்

முன்னுரை;- அறம் இரண்டு கூறாகப் பிரிக்கப்படுகிறது. இல்லறம் – பற்றுவதும் அறம். துறவறம் – பற்றை விடுவதும் அறம். இல்லறத்திலே முதிர்ந்தவர்களுக்குத்தான் துறவறம். எனவே முதலில் பயிலப்பட வேண்டியது இல்லறம். பெரும்பான்மையானோருக்கு உரியதும் இல்லறமே. துறவறம் என்பது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது. இல்லறத்திலே முதிர்ச்சியடைய வேண்டும். அந்த முதிர்ச்சியைத் தருவது திருக்குறளின் இல்லறவியல். திருக்குறள் மனிதனைச் செதுக்க வல்லது. இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகளை வகுக்கிறார் வள்ளுவர். இந்தக் கடமைகள் அனைத்தையும் அறத்தின் வழியே நின்று செய்ய வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 5 -குறள் – 49

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. விளக்கம்;- அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை – துறவு நோக்கி முயல்வாரை விடவும் இல்லறத்தான் சிறந்தவன் என்கிறார் வள்ளுவர். இல்லறம், துறவறம் என்று இரண்டுவகை அறங்கள் தான் உண்டு. இதில் அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று இல்லறம் பிரிக்கப்படுவதால் இது பிரிநிலை ஏகாரம். எனவேதான், அஃது என்பது துறவறத்தைக் குறிக்கிறது. பிறன் பழிப்பது – கூடாவொழுக்கம் – நல்லொழுக்கத்தோடு பொருந்தாத ஒழுக்கம். துறவி துறவை மேற்கொண்டுவிட்டால் பொய்மையோடு ஒத்துப் போகக் […]

Continue Reading

வாழ்க்கைத் துணை நலம்

முன்னுரை;- அறம் இரண்டு கூறாகப் பிரிக்கபடுகிறது. இல்லறம் – பற்றுவதும் அறம் துறவறம் – பற்றை விடுவதும் அறம் இல்லறத்திலே முதிர்ந்தவர்களுக்குத்தான் துறவறம். எனவே முதலில் பயிலப்பட வேண்டியது இல்லறம். பெரும்பான்மையானோருக்க உரியதும் இல்லறமே. துறவறம் என்பது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது. இல்லறத்திலே முதிர்ச்சியடைய வேண்டும். அந்த முதிர்ச்சியைத் தருவது திருக்குறளின் இல்லறவியல். திருக்குறள் மனிதனைச் செதுக்க வல்லது. இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகளை வகுக்கிறார் வள்ளுவர். இந்தக் கடமைகள் அனைத்தையும் அறத்தின் வழியே நின்று செய்ய வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 39

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. விளக்கம்;- அறத்தால் (இல்லறத்தால்) வருவதே இன்பம் என்கிறார். அடுத்த அதிகாரம் இல்லறவியல் எனவே அதற்கு முகப்புக் கட்டுகிறார். அறத்தான் வருவதே இன்பம் – அறத்தோடு வருவதே இன்பம் என்று இருக்க வேண்டும். இங்கே ஒடு உருபுக்குப் பதிலாக ஆன் உருபு வருகிறது. ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக் கண் வந்தது. இப்படி வரலாமா? என்று கேட்டால் வரலாம் அதற்கு புறநானூற்றுச் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். தூங்கு […]

Continue Reading

அதிகாரம் – 2 குறள் – 19

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம்;- தானம் – இல்லறம் தவம் – துறவறம் வானம் வழங்காதெனின் – மழை பெய்யாதாயின் மழை பெய்யாவிட்டால் இல்லறமும் துறவறமும் நிலைக்காது என்கிறார். அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை. மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை. தானம் என்பதின் விளக்கம்;- 1 அறவழியில் வந்த பொருளை 2. தக்கார்க்கு 3. உவகையோடு 4. கொடுக்க வேண்டும். இந்த நான்கும் சேர்ந்ததுதான் தானம். […]

Continue Reading