அதிகாரம் – 11 – குறள் – 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. விளக்கம்:- காலத்தினால் செய்த நன்றி – ஒருவனுக்கு இறுதி வந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம், சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது – தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. நன்றி – உபகாரம். ஒருவர் உயிராபத்தில் இருக்கும்போது நாம் செய்கிற உதவி காலத்தில் செய்த உதவியாகும். அந்த உதவி எத்தனைச் சிறிதாயிருந்தாலும் அந்தக் காலத்தை நோக்கும்போது இவ்வுலகத்தை விட மிகவும் […]

Continue Reading

விருந்து ஓம்பல்

பாயிரம்:- அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென் புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடை நின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது. விருந்து எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று பரிமேலழகர் விளக்குகிறார். இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகள் உண்டு என்று நாம் முன்னதாகவேப் பார்த்தோம். அதில் வரும் […]

Continue Reading