அதிகாரம் – 14 – குறள் – 140

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார். விளக்கம்:- உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் – உலகத்தோடு பொருந்த ஒழுகதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் – பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். உலகம் – உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. இதுவே தமிழர் பண்பாடு. உயர்ந்தவரோடு ஒத்து நட என்பதே இதன் பொருளாகும். ஒழுக்குவது – மேலேயிருந்து ஒழுகுவது. உயர்ந்தோரிடம் இருந்து வருவதற்குப் பெயரே ஒழுக்கம். ஆகவே உலகத்தோடொட்ட ஒழுகுவது என்றால் உயர்ந்தவர்களோடு ஒட்டுவதாகும். […]

Continue Reading

அதிகாரம் – 2 – குறள் – 20

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. விளக்கம்;- மேலே கூறிய ஒன்பது குறளிலும் நீர் இன்றி இந்த உலகம் அமையாது என்று சொன்னார். பத்தாவது குறளிலும் அதையே கூறுகிறார். யார்யார்க்கும் – உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லோருக்கும் மழை அவசியம் எனவே அடுக்கிக் கூறுகிறார். உலகம் (உலகியல்) – பொருள், இன்பம் இதையே குறிக்கும். உலகம் இயங்குவதற்கு பொருள் இன்பங்கள் தேவை. இதற்கு அடிப்படையான நீர் தேவை. எனவே நீரின்றி இந்த பொருள் இன்பங்கள் அமையாது. […]

Continue Reading