அதிகாரம் – 14 – குறள் – 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி. விளக்கம்:- ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் – எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் – அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் அந்த ஒழுக்கத்தாலே உயர்வை அடைவார். அப்படியானால் ஒழுக்கந்தவறி நடந்தால் என்ன நிலை என்ற கேள்வி வருகிறது. ஒழுக்கந்தவறினால் உயர்வும் கிடைக்காது அதே நேரம் தாழ்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர். தேவை இல்லாத தவறை ஒருவர் செய்கிறாரென்றால் […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம்:- அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை) ஆக்கம் – செல்வம் பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது. […]

Continue Reading