ஒழுக்கம் உடைமை

அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின், அடக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது. மனிதன் ஏன் ஒழுக்கமுடையவனாக வாழ வேண்டும்? இல்லறத்தைச் சிறப்பிக்க ஒழுக்கம் முக்கியம். மனிதன் சென்று கொண்டிருக்கும் அன்புப்பாதை விருத்தியடைவதற்கும் ஒழுக்கம் அவசியம். அன்பு குறைந்தால் இல்லறத்தின் நோக்கம் சிதைந்துவிடும். ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம் முக்கியமாக இருக்க வேண்டுமானால் அடக்கம் முக்கியம். ஆகவே, ஒழுக்கமுடைமைக்கு முன்னதாக அடக்கமுடைமையை வைத்தார். ஐம்புலன்களும் நம்மோடு வரவேண்டும். நாம் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. விளக்கம்:- அன்பின் வழியது உயிர்நிலை – அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது, அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன. இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் இல்லறத்தில் அன்பு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறுகிறது. ஆகவே அன்பு இல்லாமல் மனைவி குழந்தைகளிடம் அதைக் […]

Continue Reading