அதிகாரம் – 11 – குறள் – 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. விளக்கம்:- எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் – பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை – ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. நன்றி மறந்தவருக்கு எந்த வகையிலும் உய்வில்லை. இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு உய்வே இல்லை. பெரிய அறங்களைச் சிதைத்தல் என்றால் என்ன? இத்தகையப் பாவங்களைச் செய்தவர்களுக்குக் கூட பிராயச்சித்தம் உண்டு. அதைப்பற்றி […]

Continue Reading