அதிகாரம் – 12 – குறள் – 117

கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. விளக்கம்:- நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை, கெடுவாக வையாது உலகம் – வறுமை என்று கருதார் உயர்ந்தோர். நடுவு நிலைமையோடு இருந்தும் வறுமை வந்தால் அதற்குத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்று இக்குறளில் பார்க்கலாம். ஊழின் காரணமாக வறுமை வந்தால் கவலைப்படக்கூடாது. ஏனென்றால், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். எனவே உயர்ந்தவர்கள் நடுவுநிலைமையோடு இருப்பவர்கள் வறுமையில் […]

Continue Reading

அதிகாரம் – 2 – குறள் – 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. விளக்கம்;- விண்ணின்று பொய்ப்பின் – தேவைப்படும் காலத்தில் மழை பெய்ய வேண்டும். மழை வேண்டிய காலத்தில் பெய்யாது பொய்த்தால் பசி நிலைத்துவிடும். இந்த உலகம் நீராகிய கடலால் சூழப்பட்டது ஆயினும் மழை அவசியம். எனவே மழை பெய்யாவிட்டால், இந்த அகன்ற உலகத்தில் பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும்.

Continue Reading