அதிகாரம் – 13 – குறள் – 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. விளக்கம்:- ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமை போல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்க வல்லன் ஆயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. இயற்கையைக் கவனிப்பதே அறம். இதையே நமது முன்னோர்களும் செய்தார்கள். எனவே வள்ளுவரும் இக்குறளில் மெய்யடக்கத்திற்கு உதாரணமாக ஆமையை கூறுகிறார். ஒருமை – ஒரு பிறவி எழுமை – ஏழு […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம்;- எழுபிறப்பு என்பதிலே இரு அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது அர்த்தம்;- ஒருவனுடைய சாயல் ஏழு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. ஏழாவது தலைமுறையிலே தலைமுறை மாற்றப்பட்டுவிடும். இப்படி ஒருவனுடைய சாயல் ஏழாம் தலைமுறையோடு முடியப்போகிறது. எழுபிறப்பு என்பது ஒருவனுடைய தொடர்ச்சியான அவன் நிலை நிற்கக்கூடிய ஏழு இடங்கள். ஏழுதலை முறை வரைக்கும் இவனுடைய அடையாளம் மற்றும் பண்பு இருக்கும். இரண்டாவது அர்த்தம்;- பிறப்பேழாவன;- ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம் நீர்ப்பறவை […]

Continue Reading