அதிகாரம் – 13 – குறள் – 124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. விளக்கம்:- நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப் பெரிது – மலையின் உயர்ச்சியினும் மிகப்பெரிது. திரியாது அடங்குதல் – பொறிகளால் புலன்களை நுகரா நின்றே அடங்குதல், ‘மலை’ ஆகுபெயர். அதிகார வைப்புமுறைப் படி இக்குறளைப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இல்லறத்தான் பொறிகளை (ஐம்புலன்களை) அனுபவிக்கவும் வேண்டும். அதே நேரம் தனதுக் கட்டுப்பாட்டுக்கு மீறியும் அனுபவிக்கக் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. விளக்கம்:- யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கையகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப்புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்? புறத்துறுப்பெல்லாம் என்ன செய்யும் என்பதே பொருளாகும். என்ன என்பதற்கு எவன் என்பது பொருள். இது அக்காலத்தியப் பிரயோகம். நாம் கற்கின்ற அதிகாரம் இல்லறவியல். எனவே புறத்துறுப்பு என்பது உடலில் […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 39

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. விளக்கம்;- அறத்தால் (இல்லறத்தால்) வருவதே இன்பம் என்கிறார். அடுத்த அதிகாரம் இல்லறவியல் எனவே அதற்கு முகப்புக் கட்டுகிறார். அறத்தான் வருவதே இன்பம் – அறத்தோடு வருவதே இன்பம் என்று இருக்க வேண்டும். இங்கே ஒடு உருபுக்குப் பதிலாக ஆன் உருபு வருகிறது. ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக் கண் வந்தது. இப்படி வரலாமா? என்று கேட்டால் வரலாம் அதற்கு புறநானூற்றுச் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். தூங்கு […]

Continue Reading

அதிகாரம் – 3 – குறள் – 25

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி. விளக்கம்;- ஐந்து – ஐம்பொறிகள். ஆறாவது பொறி என்று ஒன்று இல்லை. எனவே இது முற்றும்மை. ஆற்றலகல் என்பது ஆற்றலுக்கு என்று இருக்க வேண்டும். இவை குறளுக்குள் மறைந்திருக்கிறது. கடந்த குறளில் ஐம்புலன்களையும் அடக்குவதைப் பற்றிக் கூறினார். இந்தக் குறளில் ஐம்புலன்களையும் அடக்குவதால் என்ன பலன்? என்று கூறுகிறார். அகலிகை, இந்திரன் கதையை மேற்கோளாகக் காட்டிக் கூறுகிறார். அகலிகை முனிவருடைய மகள். அவள் பேரழகு வாய்ந்தவள். தேவர் […]

Continue Reading