அதிகாரம் -11 – குறள் – 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயர் நட்பு. விளக்கம்:- துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க – துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க – அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவாதொழிக. நாம் துன்பப்படும் காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்தவரை எக்காலத்திலும் மறக்கக்கூடாது. இதைக் கட்டளையாகவே கூறுகிறார் வள்ளுவர். இப்படிப் பெற்ற உதவியைப் போற்றவேண்டும். கடந்த இரு குறள்களிலும் பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவிக்குப் பெருமையுண்டு என்று கூறினார் அல்லவா? […]
Continue Reading