அதிகாரம் – 13 – குறள் – 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. விளக்கம்:- தீயினால் சுட்ட புண் உள் ஆறும் – ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது – அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. முதல் ஐந்து குறள்களும் பொதுவான அடக்கம் பற்றிக் கூறின. ஆறாவது குறள் மெய்யடக்கம் பற்றிக் கூறியது. வார்த்தை அடக்கத்திற்கு மூன்று குறள்களை திருவள்ளுவர் […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழுங்கு வது. விளக்கம்:- இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் – பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன். வன்சொல் வழங்குவது எவன்கொல் – அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? இன்சொல் இனிமையுடையது என்பதை நம் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். எப்படியென்றால் ஒருவர் நம்மிடம் இனிமையாகப் பேசி நலம் விசாரித்தால் நாம் அதனை விரும்புகிறோம். அதே நேரம் கடுஞ்சொல்லைப் பேசினால் […]

Continue Reading