அதிகாரம் – 14 – குறள் – 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். விளக்கம்:- ஓத்து மறப்பினும் கொளலாகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். கல்வியாளராகிய பிராமண வருணத்தைச் சேர்ந்தவர் தான் கற்ற வேதத்தினை மறந்தாலும் பின்பு அதனைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் தவறிப் போவாராயின் அவர் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவராகி விடுவார். […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 133

ஒழுக்க முடைமை குடைமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். விளக்கம்:- ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். வருணம் என்ற நான்கு பிரிவுகள் பற்றி முதல் குறளிலே படித்தோம். உற்பத்தியாளர் – சூத்திரர் விநியோகஸ்தர் – வைசியர் நிர்வாகி – சத்திரியர் கல்வியாளர் – பிராமணர் இந்த நான்கு வருணங்களுக்குள்ளும் குலப் பிரிவுகள் உண்டு. அவர்கள் […]

Continue Reading