அதிகாரம் – 12 – குறள் -115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம்:- கேடும் பெருக்கமும் இல் அல்ல – தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி- அவ்வாற்றையறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. நடுவுநிலைமை தவறி ஏன் சிலர் வாழ்கின்றனர்? இக்கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர். நடுவுநிலைமை தவறி நடப்பவர்கள் தமது வாழ்வு தமது கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டுள்ளனர். அது உண்மையல்ல. மனித வாழ்க்கையில் வரும் […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 32

அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை மறத்திலி னூங்கில்லை கேடு. விளக்கம்;- முதல் குறளிலே அறத்தினை செய்வதால் வரும் நன்மை கூறப்பட்டது. இந்தக் குறளில் அறத்தினை செய்யாவிட்டால் கேடு வரும் என்பது கூறப்பட்டது. தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் படி கூறியது கூறல் என்பது குற்றம். ஆனால் ஒரு விடயத்தை அழுத்திக் கூறுவதற்கு திரும்பத் திரும்பக் கூறலாம். இது விதிவிலக்கு. எனவே இந்தக் குறளிலும் முதல் குறளில் கூறியதை திரும்பவும் அழுத்தமாகவே கூறுகிறார். கூறியது கூறல் – […]

Continue Reading