அதிகாரம் – 9 – குறள் – 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் றன்று. விளக்கம்:- சாவா மருந்து எனினும் – உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும், விருந்து புறத்ததாத் தான் உண்டல் – தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல், வேண்டற்பாற்று அன்று – விரும்புதல் முறைமையுடைத்து அன்று. கடந்த குறளிலே வாழ்க்கையினுடைய அவசியம் விருந்து தான் என்று கூறினார். இக்குறளிலே விருந்தினரை எப்படி பேண வேண்டும் என்று கூறுகிறார். விருந்தினரை நம்மில் ஒருவராக நினைக்க […]

Continue Reading